Home /News /entertainment /

2வது குழந்தைக்கு தாயாகும் விஜய் டிவி சீரியல் பிரபலம்!

2வது குழந்தைக்கு தாயாகும் விஜய் டிவி சீரியல் பிரபலம்!

விஜய் டிவி ஆனந்தி

விஜய் டிவி ஆனந்தி

ஆனந்தி 2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுடன் ஷேர் செய்து இருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஆனந்தி 2வது முறையாக கர்ப்பமாக உள்ளார். இந்த விஷயத்தை இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் ஷேர் செய்துள்ளார்.

    விஜய் டிவி பிரபலங்களுக்கு எப்போதுமே மக்கள் மனதில் நிரந்தர இடம் கிடைத்து விடுகிறது. அவர்கள் சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சியை விட்டு சென்றாலும் கூட சமூகவலைத்தளம் மூலம் ரசிகர்கள் அவர்களை பின் தொடர்கிறார்கள். லைவில் அவர்களுடன் உரையாடுகின்றனர். அவர்கள் குறித்த அப்டேட்டுகளையும் தெரிந்து கொள்கின்றனர். அந்த வகையில் கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் மற்றும் கனா காணும் காலங்கள் ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமடைந்த ஆனந்தியை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள். டான்சரான ஆனந்தி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி பாராட்டுக்களை அள்ளி இருக்கிறார்.



    ரசிகர்களின் ஃபேவரெட் சீரியல் நடிகை.. எதிர் நீச்சல் ஜனனி பற்றி இதெல்லாம் தெரியுமா?

    ஆனந்தி வெள்ளித்திரையில் மீகாமன், தாரை தப்பட்டை உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார். இவர் அஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு 6 வயதில் மகனும் உள்ளார். சின்ன கேப்புக்கு பின்பு சின்னத்திரையில் கம்பேக் கொடுத்த ஆனந்தி ராஜ பார்வை, அம்மன் 2, போன்ற சீரியல்களில் நடித்தார். அதுமட்டுமில்லை ஜீ தமிழில் டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.




    இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ஆனந்தி அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ, டான்ஸ் வீடியோக்களை வெளியிடுவார். அதுமட்டுமில்லை கணவர், குழந்தை, அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிடுவார். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு ஆனந்தி தான் 2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுடன் ஷேர் செய்து இருக்கிறார். இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. 2வது குழந்தைக்காக காத்திருக்கிறேன். இது 5வது மாதம் எனவும் கூறியுள்ளார். ஆனந்தியின் இந்த பதிவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர். ரசிகர்களும் ஆனந்தி மற்றும் அவரின் கணவருக்கு தங்களது வாழ்த்துக்களை ஷேர் செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி