• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் டிவி ராஜா ராணி சீரியலில் இருந்து ஆல்யா விலகல்? காரணம் அப்படி!

விஜய் டிவி ராஜா ராணி சீரியலில் இருந்து ஆல்யா விலகல்? காரணம் அப்படி!

ஆல்யா மானசா

ஆல்யா மானசா

ஆல்யா மானசா மீண்டும் கருத்தரித்திருப்பதாக கடந்த மாதம் ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் அறிவித்திருந்தார்.

  • Share this:
    விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய சீரியல்களில் ஒன்று தான் ராஜா ராணி. மேலும் அந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை ஆல்யா மானசா.

    இவர் 17 வயதில் மாடலாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். அதேபோல இவர் ஆர்.ஜேவாகவும் பணிபுரிந்துள்ளார். நடனம் ஆடுவதில் சிறந்து விளங்கும் இவர் ஒரு நடன பயிற்றுவிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். அவ்வபோது இவர் வெளியிடும் டான்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி நல்ல வரவேற்பை பெறும்.

    ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பாகவே ஆல்யா மானசா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவருடன் ஜோடியாக ஆடிய மானஸ் என்பவரை ஆல்யா மானஸா காதலித்து வந்தார். ராஜா ராணி சீரியலில் நடிக்க தொடங்கி சில மாதங்களில் இவர்களது காதல் முறிவடைந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்து வந்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐலா என்ற ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. சமூகவலைத்தள பக்கங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி தற்போது ‘சஞ்ஜீவ் ஆல்யா’ என்ற யூடூப் சேனலை நடத்தி வருகின்றனர். கர்ப்பமாக இருந்த காலத்தில் சீரியலில் நடிப்பதிலிருந்து விலகியிருந்த ஆல்யா. குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இவர் ராஜா ராணி-2 சீரியலில் நடித்து வருகிறார். முதல் சீசனில் கிடைத்த அதே வரவேற்பும், ஆதரவும் 2-ம் சீசனுக்கும் கிடைத்தது.

    இந்த வார நாமினேஷன் லிஸ்டில் யார் யார்? உறுதியான இரண்டு நபர்கள்!

    இந்த தொடரில் சித்துவுக்கு ஜோடியாக ஆல்யா நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம் ஆல்யாவின் கணவர் சஞ்சீவ், தனது மனைவி மீண்டும் கருத்தரித்திருப்பதாக அறிவித்திருந்தார். இருப்பினும், ஆல்யா இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். அதேபோல இன்ஸ்டா பக்கத்தில் அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by alya_manasa (@alya_manasa)






    அந்த வகையில், சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ஆல்யாவிடம் ரசிகர் ஒருவர் “நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்களா? ” என கேட்டுள்ளார். அதற்கு சிரித்தபடி மகிழ்ச்சியுடன் தலையாட்டி, தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார் “. இதனை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜா ராணி -2 சீரியலில் இருந்து ஆல்யா விலகுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: