ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கோவையில் விஜய் டக்கர் சேனலின் டக்கர் டேலண்ட் ஃபீஸ்ட்!

கோவையில் விஜய் டக்கர் சேனலின் டக்கர் டேலண்ட் ஃபீஸ்ட்!

விஜய் டக்கர்

விஜய் டக்கர்

‘விஜய் டக்கர்’ சேனல், Non Fiction வகையில், திரைப்படங்கள், இசை என இளைஞர்களுக்கான முழு கலவையை கொண்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திறமையாளர்களை அடையாளம் காணும் வகையில் விஜய் டக்கர் சேனலின் டக்கர் டேலண்ட் ஃபீஸ்ட் கோவையில் நடைப்பெறவிருக்கிறது.

  தமிழில் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனலை சமீபத்தில் ஸ்டார் விஜய் தொடங்கியது. ‘விஜய் டக்கர்’ என்ற இந்த புதிய சேனல், ‘புதிய இளமை’ எனும் டேக்லைனுடன் இளைஞர்களுக்கான புதிய சேனலாக வருகிறது. இன்றைய இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு பிராண்டாக, பொழுதுபோக்கு துறையில் டிரெண்ட்செட்டராக ‘விஜய் டக்கர்’ சேனல் இருக்கும். ‘விஜய் டக்கர் - இனி இது தான் டிரெண்ட்செட்டர்’ என்ற டேக்லைன் உபயோகிக்கப்படுகிறது.

  ‘விஜய் டக்கர்’ சேனல், Non Fiction வகையில், திரைப்படங்கள், இசை என இளைஞர்களுக்கான முழு கலவையை கொண்டுள்ளது. இன்றைய இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில், தினமும் தொடர்ச்சியாக பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இதில் ஒளிபரப்பாக உள்ளன.

  தமிழகத்தின் 2k கிட் (gen z) தலைமுறையினரின் கல்லூரி வாழ்வை காட்சிப்படுத்தும் ‘காலேஜ் டா’, ‘சினிமா காரம் காஃபி’ என்ற நகைச்சுவை அரட்டை நிகழ்ச்சி, ‘டிரக் மேல லக்கு’ என்ற கேம் ஷோ, சாதாரண பொதுமக்களை அழகாக்கும் ‘ஸ்டைல் ஸ்டைல்தான்’, பிரபலங்களின் வாழ்க்கையை காட்டும் ‘ஸ்டாருடன் ஒருநாள்’, ‘சம்திங் சம்திங்’, ’டேட்டிங் ஷோ’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இந்த சேனலில் இடம்பெறுகின்றன.

  வடிவேலுவின் சிம்மாசனத்தில் அவரால் மட்டுமே மீண்டுமே அமர முடியும் - சுராஜ்

  இந்நிலையில் திறமையாளர்களை அடையாளம் காணும் வகையில் விஜய் டக்கர் சேனலின் டக்கர் டேலண்ட் ஃபீஸ்ட் கோவையில் நடைப்பெறவிருக்கிறது. கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியில் வரும் 19 மற்றும் 20-ம் தேதி இந்த கொண்டாட்டம் நடைபெறவிருக்கிறது. பாட்டு, நடனம், பொழுதுபோக்கு விஷயங்களில் கில்லாடிகளாக திகழும் மாணவர்களை இந்நிகழ்ச்சி மேலும் உற்சாகப்படுத்தும் என்கிறது சேனல் தரப்பு.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Vijay tv