ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மளிகை கடை.. மாவு கடை.. ஸ்வீட்டு கடை.. விஜய் டிவி சீரியல்களை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

மளிகை கடை.. மாவு கடை.. ஸ்வீட்டு கடை.. விஜய் டிவி சீரியல்களை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

விஜய் டிவ் சீரியல்

விஜய் டிவ் சீரியல்

மொத்த சீரியலின் ஒன் லைன் ஸ்டோரியையும் நெட்டிசன்கள் முடித்து வைத்துவிட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், இணையவாசிகள் மத்தியில் கேலி, கிண்டலுக்கு ஆளாகாத நாளே இல்லை. என்ன தான் சீரியல்கள் டி.ஆர்.பியில் முதலிடத்தில் வந்து ஏகோபித்த வரவேற்புகளை பெற்றாலும், சீரியலின் கதையை, கதாபாத்திரங்களை, ட்விஸ்டுகளை நெட்டிசன்கள் போற போக்கில் கலாய்த்து தள்ளிவிடுவார்கள். அதிலும் பிரைம் டைமில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி சீரியல்கள் அடிக்கடி இதில் சிக்குவது உண்டு.

அதற்கு மிக முக்கியமான காரணம் சீரியல்களின் ஒன் லைன் ஸ்டோரி. சில வாரங்களுக்கு முன்பு ராஜா ராணி 2சீரியல் டி.ஆர்.பியில் சரிவை கண்டு இருந்தது. அதற்கு சீரியலின் ஹீரோயினான சந்தியாவாக நடிக்கும் ஆல்யா மானசாவின் ஓவர் ஆக்டிங் தான் காரணம் என தகவல்கள் பரவியதும் அதை வைத்து இணையத்தில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் பறந்தன. அதே போல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் அடிக்கடி இதுப்போன்ற கிண்டலுக்கு ஆளாகும். இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 4 சீரியல்களையும் ஒரே நேரத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர். பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2  இந்த 4 சீரியல்கள் தான் அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க.. Amir : பிக் பாஸ் அமீர் வாழ்க்கையை மாற்றிய குழந்தைகள்.. காலில் விழும் வீடியோ வைரல்!

இந்த சீரியல்கள் இரவு 8 மணி முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக தொடங்குகிறது. இந்த 4 சீரியல்களின் கதையும் வேறு வேறு என்று தான் இதுவரை ரசிகர்கள் நினைத்து வந்தனர். ஆனால் நெட்டிசன்கள் இந்த 4 சீரியல்களின் கதையும் ஒன்று தான் பாரதி கண்ணம்மாவில் கண்ணம்மா மாவு கடை நடத்துகிறார், பாண்டியன் ஸ்டோர்ஸில் அண்ணன்கள் மளிகை கடை வைத்துள்ளனர், பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா மசாலா மற்றும் ஹோட்டல் கடை, ராஜா ராணி சீரியலில் ஹீரோ ஸ்வீட்டு கடை வைத்திருக்கிறார் என ஒரே போடில் மொத்த சீரியலின் ஒன் லைன் ஸ்டோரியையும் முடித்து வைத்துவிட்டனர்.

' isDesktop="true" id="647931" youtubeid="l6BdnOamiKc" category="television">

ரசிகர்களின் இந்த கமெண்டுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதுமட்டுமில்லை சீரியல் புரமோ கமெண்ட் செக்‌ஷனிலும் இந்த கருத்துக்களை நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது.

இதையும் படிங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் ஐஸ்வர்யாவை பார்த்து பொறாமை படும் மீனா!

இதை சீரியல் ரசிகர்களும் வரவேற்று உள்ளது தான் இதில் ஹைலைட் ஆன விஷயம். அரைத்த மாவையே வேறு வேறு விதத்தில் அரைத்து ரசிகர்களை ஏமாற்றுவதாக சீரியல் ரசிகர்கள் விஜய் டிவி மீது பொங்கி எழுந்துள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial Promos, Vijay tv