Home /News /entertainment /

விஜய் டிவி சீரியல்களில் மிகப்பெரிய மாற்றம்... அதிருப்தியில் ரசிகர்கள்!

விஜய் டிவி சீரியல்களில் மிகப்பெரிய மாற்றம்... அதிருப்தியில் ரசிகர்கள்!

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவியின் மற்றொரு சீரியலான தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலின் ஒளிபரப்பு நேரமும் மாற்றப்படுகிறது.

    ஒரு சீரியலின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருப்பது ப்ரைம் டைமில் மிகச்சரியான சீரியலை தேர்ந்தெடுத்து ஒளிபரப்பு செய்வதாகும். அதே போல, ஒவ்வொரு சீரியலுக்கும் அந்தந்த நேரம் வெற்றியாக அமைந்துவிடுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சீரியலைப் பார்த்து பழகி போன ரசிகர்களுக்கு, சீரியலில் சிறியதாக மாற்றம் ஏதாவது ஏற்பட்டால் டிஆர்பி குறைந்துவிடும். அதாவது சீரியலின் நடிகர் நடிகைகள், சீரியலில் இயக்குனர் மாறுவது, கதைக்களம் ஒட்டுமொத்தமாக மாறுவது திடீரென்று இடை நிறுத்துவது போன்ற மாற்றங்கள் ரசிகர்களை ஏமாற்றவதோடு மட்டுமல்லாமல், சீரியலின் டிஆர்பியையும் குறிக்கிறது.

    நடிகர் நடிகைகளை மாற்றுவது எந்த அளவுக்கு கடுப்பாக்குமோ, அதே அளவுக்கு ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் முக்கிய விஷயம், சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தையும் மாற்றுவது ஆகும். அந்த வகையில், விஜய் டிவி சீரியல்களில் நேர மாற்றம் ரசிகர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.

    இதையும் படிங்க.. சன் டிவிக்கு வந்த செம்பருத்தி சீரியல் நடிகை.. அப்ப சீரியலில் இனி வில்லி இல்லையா?

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வருகின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஏற்கனவே ஒரு சில சீரியல்களின் ஒளிபரப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சில சீரியல்கள் நேரம் மாற்றப்பட்டன, சில சீரியல்கள் அவசரமாக முடிக்கபட்டிருந்தன. பிக் பாஸ் சீசன் 5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த செந்தூரப்பூவே சீரியல் நிறுத்தப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், படபிடிப்பு துவங்கப்பட்டு தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.

    ஆனால், தற்போது செந்தூரப்பூவே சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தை மீண்டும் மாற்றம் இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இரவில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே தொடர் இனி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

    அதே போல, விஜய் டிவியின் மற்றொரு சீரியலான தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலின் ஒளிபரப்பு நேரமும் மாற்றப்படுகிறது. மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல் இனி விஜய் டிவியில் இரவு 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது என்று கூறப்படுகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல் சமீபத்தில்தான் ஒளிபரப்பாக தொடங்கியது. தொடங்கிய குறைந்த நாட்களிலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது, செந்தூரப்பூவே அந்த அளவுக்கு இன்னும் ரசிகர்களை கவரவில்லை என்று கூறலாம். எனவே செந்துரப்பூவே தொடருக்குப் பதிலாக தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலை மாலையில் ஒளிபரப்பினால் செம ஹிட்டாகும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்துள்ளனர்

    இந்த சீரியல்களின் நேர மாற்றங்கள் சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கை எவ்வாறு பாதிக்கிறது என்பது டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்குமா என்பது வரும் சில வாரங்களில் தெரிந்துவிடும்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி