• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் கண்ணன்.. தாங்க முடியாமல் பொங்கி எழுந்த ஐஸ்வர்யா!

தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் கண்ணன்.. தாங்க முடியாமல் பொங்கி எழுந்த ஐஸ்வர்யா!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கண்ணன் மனமுடைந்து தேம்பி தேம்பி கோயிலில் அழுகிறான்.

  • Share this:
    கண்ணனை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தொடர்ந்து அவமானப்படுத்துவதால் தாங்க முடியாத ஐஸ்வர்யா பொங்கி வெடிக்கிறார்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கூடிய விரைவில் மூர்த்தி குடும்பத்துடன் இணைந்து விடுவான் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்காது என்று தெரிந்த உடனே பொங்கி வெடிக்கிறார் ஐஸ்வர்யா. நேற்றைய தினம் வீட்டுக்கு வரும் கஸ்தூரி அத்தாச்சி கண்ணன் - ஐஸ்வர்யாவிடம் நல்லப்படியாக பேசுகிறார். இருவருக்கும் மிகப் பெரிய ஆச்சரியம். கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் என்னுடைய பிள்ளைகள் என பாசத்தை பொழிகிறார். அதுமட்டுமில்லை குல தெய்வ கோயிலுக்கு இருவரையும் வர சொல்லி வற்புறுத்துகிறார்.

    அதுவரை போக வேண்டாம் என்ற முடிவில் இருந்த கண்ணன், அத்தாச்சியின் பேச்சை கேட்டு மனம் மாறுகிறான். இது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் நீங்கள் சேருவதற்கான வழி என அட்வைஸ் சொல்லி இருவரையும் வர சொல்லி வற்புறுத்துகிறார். அதுமட்டுமில்லை எல்லார் முன்னாடியும் கோபமாக திட்டுவது போல் நடிப்பேன் என்றும் முன்பே சொல்லிவிடுகிறார் அத்தாச்சி. பின்பு கண்ணனும் ஐஸ்வர்யாவும் கோயிலுக்கு கிளம்புகிறார்கள். இந்த பக்கம் குட்டி யானையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே கோயிலுக்கு வர மீனாவின் அப்பா வழக்கம் போல் திட்டுகிறார். மாசமாக இருக்கும் தனம் இந்த வண்டியில் வரக்கூடாது, ஏன் இப்படி பண்றீங்க? அப்படின்னு மூர்த்தியையும் திட்டுகிறார்.

    இவர்கள் பேசி கொண்டிருக்க, சரியான நேரத்தில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் கோயிலுக்கு வருகிறார்கள். வழக்கம் போல் மீனாவின் அப்பா மூஞ்சை காட்டுகிறார், கஸ்தூரி அத்தாச்சியும் திட்டுவது போல் நடிக்கிறார். ஆனால், வந்தவர்களை யாரும் வா என்று கூப்பிடாமல் கோயிலுக்குள் செல்கிறார்கள். அழையா விருந்தாளிகள் போல் கண்ணனும் ஐஸ்வர்யாவும் ஓரமாக போய் நிற்கிறார்கள்.அடுத்தது பூஜை முடிந்ததும் மாலை போடப்படுகிறது. லட்சுமி அம்மா மகன்கள் நால்வருக்கும் மாலை போடப்படாமல் மூர்த்தி, ஜீவா, கதிர் மட்டும் மாலையை வாங்கி கொள்கிறார்கள். மீண்டும் அந்த இடத்தில் கண்ணன் அவமானப்படுத்தப்படுகிறான். ஆனாலும் எல்லாவற்றையும் மறந்து கண்ணன் மீண்டும் விளக்கு ஏற்றும் இடத்திற்கு போய் குடும்பத்துடன் நிற்கிறான்.

    அப்போது விளக்கு ஏற்ற அகல் வாங்கதாதல் மூர்த்தி கோபப்படுகிறார். ஐயர், 15 நிமிடத்தில் விளக்கு ஏற்றிவிட வேண்டும் என்று நேரம் சொல்ல, உடனே கண்ணன், ஏற்கெனவே எரிந்து கொண்டிருக்கும் விளக்கை கொண்டு போய் தனத்திடம் கொடுக்க, கஸ்தூரி அத்தாச்சி, மீனா அப்பா எல்லோரும் சேர்ந்து கொண்டு கண்ணனை திட்டுகிறார்கள். ஆனால் மூர்த்தி, தனம் யாருமே பதிலுக்கு எதுவும் பேசவில்லை.அதற்குள் கதிர் புது அகல் வாங்கி கொண்டு வர குடும்பமாக சேர்ந்து விளக்கு ஏற்றுகிறார்கள். அங்கும் கண்ணனுக்கு இடமில்லை. விளக்கு ஏற்ற போன கண்ணனையும் மீனா அப்பா அசிங்கப்படுத்துகிறார். இதனால் கண்ணன் மனமுடைந்து தேம்பி தேம்பி கோயிலில் அழுகிறான். இதை பார்த்த ஐஸ்வர்யா கோபத்தில் வெடித்து மூர்த்தி தனத்திடம் போய் கேள்வி கேட்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: