• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இன்னும் 4 நாட்கள் தான்.. கண்ணம்மாவின் மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாற போகிறது!

இன்னும் 4 நாட்கள் தான்.. கண்ணம்மாவின் மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாற போகிறது!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

ஹேமா தான் குழந்தை என அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொள்கிறாள் கண்ணம்மா.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் நீண்ட நாள் காத்திருப்புக்கு இன்னும் 4 நாட்களில் பலன் கிடைக்க போகிறது. கண்ணம்மாவுடன் கூடிய விரைவில் ஹேமா சேர போகிறாள்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரம் சிங்க பெண்ணாக, தன்மான சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கணவன் பாரதியால் சந்தேகத்தின் பெயரில் வீட்டை விட்டு அனுப்பப்பட்ட கண்ணம்மா, 8 வருடங்களாக போராடி தனது குழந்தை லட்சுமியை வளர்க்கிறாள். துணி தைத்து, கிராமத்தில் வாழ்ந்து கொண்டு ஒவ்வொரு நாளும் போராடி லட்சுமியை படிக்க வைக்கிறாள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக சென்னை திரும்பும் கண்ணம்மாவுக்கு மீண்டும் பழைய உறவுகளின் சந்திப்பு கிடைக்கிறது. பாரதி வளர்க்கும் ஹேமா கண்ணம்மாவுடன் நெருக்கம் ஆகிறாள். ஆனால் இந்தாள் வரை கண்ணம்மாவுக்கு ஹேமா தன்னுடைய குழந்தை தான் என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது, சவுந்தர்யா அதை தூக்கி சென்றது, அந்த குழந்தை ஹேமா தான் என அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொள்கிறாள் கண்ணம்மா.

    நேற்றைய தினம் பாரதி வீட்டுக்கு ஹேமாவை பார்க்க சென்றவள்,குழந்தையை கேட்டு தர்ணா செய்கிறாள். அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் ஹேமாவை தன்னுடன் அனுப்பும்படி மாமியார் சவுந்தர்யாவிடம் சண்டை போடுகிறாள். என்ன செய்வது என்றே தெரியாமல் கண்ணீர் விடுகிறார் சவுந்தர்யா. இதை பாரதி எப்படி எடுத்து கொள்வான்? ஒருவேளை ஹேமாவை பிரிந்தால் பாரதியின் நிலை என்ன? என்பதை நினைத்து சவுந்தர்யா நெஞ்சம் பதறுகிறது. கடைசியில் கண்ணம்மாவின் காலில் விழுந்து 4 நாட்கள் டைம் வாங்குகிறார் சவுந்தர்யா. அதாவது இன்னும் 4 நாட்களில் பாரதிக்கு உண்மையை சொல்லி ஹேமாவை உன்னுடன் அனுப்பி வைப்பதாக சத்தியம் செய்கிறார். அவரை நம்பி வீட்டில் இருந்து சந்தோஷமாக கிளம்புகிறாள் கண்ணம்மா.

    அதே லவ்.. இத்தனை வருஷம் ஆகியும் தென்றல் தமிழ் மாறவே இல்லை!

    நேராக வெண்பாவை சந்திக்க சென்றவள் வெண்பாவை கலாய்த்து தள்ளுகிறாள். பாரதியை விவாகரத்து செய்ய வேண்டும் என்பதற்காகவே வெண்பா பொய் சொல்லி கண்ணம்மாவை ஏமாற்றுவது அவளுக்கு நன்கு புரிந்து விட்டது. இதனால் வெண்பாவிடம் மாறி மாறி நடித்து கோபத்தை வர வைக்கிறாள். கடுப்பான வெண்பா அங்கிருந்து கிளம்புகிறாள். அதற்குள் ஹேமாவும் பாரதியும் வீட்டுக்கு காரில் திரும்பி கொண்டிருக்கிறார்கள். பாரதியின் உதவி செய்யும் குணத்தை ஹேமா பயங்கரமாக பாராட்டுகிறாள். அத்துடன் கண்ணம்மா வீட்டில் இருப்பதாக நினைத்து கொண்டு வேகமாக போய் சமையல் அம்மாவை பார்க்க வேண்டும் என்றும் பாரதியை நச்சரிக்கிறாள். இன்னும் 4 நாட்களில் என்ன செய்ய போகிறேன் என்று சவுந்தர்யா தலையை பிடித்துக் கொண்டு டேபிளில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். குழப்பத்தில், கோபத்தில் கண்ணாடி டம்ளரை அழுத்த அவருக்கு காயம் ஏற்படுகிறது. அகிலனும் அஞ்சலியும் அதை சரி செய்கிறார்கள்.

    வீட்டுக்கு வரும் கண்ணம்மா ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறாள். லட்சுமியிடம் சிரித்து சிரித்து பேசுகிறாள். அதுமட்டுமில்லை இன்னும் 4 நாட்களில் மொத்த வாழ்க்கையும் மாற போவதாக, லட்சுமியுடன் விளையாட ஒரு ஆள் வீட்டுக்கு வர போவதாகவும் கூறுகிறாள். 4 நாட்கள் கழித்து ஹேமாவை வீட்டுக்கு அழைத்து வர படு தீவிரமாக இருக்கிறாள் கண்ணம்மா. ஆனால் அடுத்த 4 நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே நிதர்சனம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: