• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அடுத்த சோகம்..மல்லிகாவால் தனத்திற்கு வரப்போகும் ஆபத்து!

அடுத்த சோகம்..மல்லிகாவால் தனத்திற்கு வரப்போகும் ஆபத்து!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கோபம் தலைக்கு ஏறுகிறது. எப்படியாவது தனத்தை பழிவாங்க வேண்டும் என எண்ணுகிறார்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் லட்சுமி அம்மா மறைவுக்கு பிறகு மல்லியால் அடுத்த பிரச்சனை தனத்திற்கு வர போவது உறுதியாகி விட்டது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சீரியல் லிஸ்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் முழுவதும் சீரியலில் லட்சுமி அம்மா மறைவு எபிசோடுகள் ஒளிப்பரப்பட்டன. இதனால் சீரியலின் டி.ஆர்பி பயங்கரமாக எகிறியது. இந்நிலையில் இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. அதுவும் தனத்தால் தான். தனத்தின் கனவில் லட்சுமி அம்மா வந்து வாக்கு சொன்னது போல் யாரும் அழ வேண்டாம் நான் உங்களுடன் தான் இருக்கிறேன் என சொல்ல மொத்த குடும்பமும் மன தைரியமாக பழைய நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நேரத்தில் தனம் பற்றி பெருமையாக தனத்தின் அம்மா மல்லி மற்றும் கஸ்தூரி அத்தாச்சியிடம் சொல்கிறார்.

    இதை பொருத்து கொள்ள முடியாத மல்லி, தனத்துக்கு மட்டும் எல்லா நல்லதும் நடப்பதாக கூறி பொறாமை கொள்கிறார். அதுமட்டுமில்லை கஸ்தூரி அத்தாச்சியும் தனம் பற்றி தப்பு தப்பாக மல்லிகாவிடம் போட்டு கொடுக்கிறார். கண்ணன் - ஐஸ்வர்யா திருமணம் தனத்திற்கு தெரிந்து தான் நடந்து இருக்கும். மல்லி மற்றும் பிரசாந்தை அசிங்கப்படுத்தவே கண்ணனை தனம் தூண்டி விட்டிருப்பார் என கஸ்தூரி சொல்ல, மல்லிகாவுக்கு தனம் மீது கோபம் தலைக்கு ஏறுகிறது. எப்படியாவது தனத்தை பழிவாங்க வேண்டும் என எண்ணுகிறார்.

    அதற்குள் ஐஸ்வர்யா- கண்ணன் வீடு காட்டப்படுகிறது. பக்கத்து தெருவுக்கு சென்று ஐஸ்வர்யா குடி தண்ணீர் பிடித்து வருகிறார். அப்போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஐஸ்வர்யாவை பற்றி விசாரிக்கிறார்கள். அப்போது தான் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைசி மருமகள் என தெரிய வழக்கம் போல் அவரும் லட்சுமி அம்மா மறைவுக்கு இவர்களின் திருமணம் தான் காரணம் என கூறி திட்டி செல்கிறார். கண்ணன் தூங்கி எழுந்து ஐஸ்வர்யாவிடம் காலேஜ் பற்றி பேசுகிறான். முதலில் இனி காலேஜூக்கு வர மாட்டேன் என்று சொன்ன ஐஸ்வர்யாவை கண்ணன் சமாதானம் செய்கிறான். அதற்குள் மீனா அப்பா கடையில் இருந்து இவர்களை வேலைக்கு கூப்பிட ஆள் வருகிறது. வந்தவரும் கண்ணன் - ஐஸ்வர்யாவை சாட்டி பேசுகிறார். லட்சுமி அம்மா இறந்தற்கும் கண்ணன் தான் காரணம் என்கிறான். அதையும் சகித்து கொண்டு நிற்கிறான் கண்ணன்,. பின்பு இருவரும் கடைக்கு போகிறார்கள்.

    வழக்கம் போல் மீனா அப்பா, கண்ணனை திட்டுகிறார். இது தான் சாக்கு என்று கடையில் வேலை செய்யும் பையனும் கண்ணனை பற்றி தப்பாக பேச, உடனே மீனா அப்பா, அந்த பையனை அடிக்கிறார். “என் சொந்தக்கார பையன நான் என்ன வேணா பேசுவேன். நீ யாரு பேச” என திட்டுகிறார். அப்போது தான் கண்ணனுக்கு மீனா அப்பாவின் அருமை புரிகிறது. வீட்டில் லட்சுமி அம்மா புடவை பார்த்து அழும் தனத்தை மீனாவின் கடலைப்பருப்பு சாம்பார் கதை சிரிக்க வைக்கிறது. துக்கத்திலும் தனத்தை சிரிக்க வைத்த பெருமை மீனாவையே சேரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: