விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவர 2 புதிய நிகழ்ச்சிகளுடன் சேனல் குழு களமிறங்கவுள்ளது. இதனால் சீரியல் டி.ஆர்.பியில் விட்டதை பிடிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டெலிவிஷனில் நம்பர் 1 சேனல் என்ற அடையாளத்தை நீண்ட ஆண்டுகளாக கையில் வைத்திருந்தது சன் டிவி தான். அதை சன் டிவியிடம் இருந்து பறித்து நிரந்தமரமாக சொந்தமாக்கியது ஸ்டார் விஜய். இந்த சேனலில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களை பெரிதும் கவர, மக்களின் மனதில் நிரந்தரமாக நின்றது. சீரியல், நிகழ்ச்சிகளில் கலக்குவது போதாது என்று டி.ஆர்.பி மிஷினாக பிக் பாஸ் நிகழ்ச்சியை களம் இறக்கியது. இதுவும் நல்ல ரிசல்டை தர சேனல் குழு செம்ம ஹாப்பியில் இருந்தது.இந்நிலையில் டி.ஆர்.பி மிஷினான பிக் பாஸ் சீசன் 5 இந்த முறை எதிர்பார்த்த ரிசல்ட்டை தரவில்லை என்று ஒருபக்கம் தகவல்கள் வெளியாகுகின்றன.
அதே போல் பாப்புலராம்ன பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி விலகிய பின்பு சீரியல் டி.ஆர்.பியும் டவுன் ஆக, சேனல் குழு அதிரடி முடிவை எடுத்து 2 புது நிகழ்ச்சிகளை உடனே களத்தில் இறக்குகிறது. முதல் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். விஜய் டிவியையும் சூப்பர் சிங்கரையும் பிரிக்கவே முடியாது. அத்தனை சீசன்களையும் கடந்து வெற்றிக்கரமாக பயணிக்கும் ரியாலிட்டி ஷோ சூப்பர் சிங்கர்.
விரைவில் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆரம்பமாகிறது.. 😍 #SuperSingerJuniorSeason8 #SuperSingerJunior #SSJ #VijayTelevision pic.twitter.com/MWyFbrseKE
— Vijay Television (@vijaytelevision) November 27, 2021
இந்நிலையில் விரைவில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக சேனல் குழு புரமோவை வெளியிட்டுள்ளது. அடுத்தது புது சீரியல் வைதேகி காத்திருந்தாள். பிரஜின் - சரண்யா லீட் ரோலில் நடிக்க இந்த சிரீயல் விரைவில் ஒளிப்பரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக் குறித்து வெளியான புரமோவில் வைதேகியாக நடிக்க வருகிறார் சரண்யா. ஆனால் அந்த வீட்டில் ராணியே இவர் தான். இந்த சீரியல் மூலம் பிரஜின் - சரண்யா மீண்டும் விஜய் டிவியில் எண்ட்ரி ஆகுகிறார்கள்.
ஒரு ராணியே ராணியாக நடிக்க வருகிறாள்.. 🙂
வைதேகி காத்திருந்தாள் - புத்தம் புதிய மெகா தொடர்.. விரைவில்.. #VaidhehiKathirunthal #VijayTelevision pic.twitter.com/V0QsKukdS1
— Vijay Television (@vijaytelevision) November 27, 2021
புரமோவை பார்த்த அனைவருக்கும் சீரியல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் கண்டிப்பாக நல்ல ரேட்டிங்கில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv