Home /News /entertainment /

செவ்வாய்கிழமை யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா? விஜய் டிவியின் பதிவுக்கு ரசிகர்களின் ரிப்ளை!

செவ்வாய்கிழமை யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா? விஜய் டிவியின் பதிவுக்கு ரசிகர்களின் ரிப்ளை!

விஜய் டிவி

விஜய் டிவி

தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு வித்தியாசமாக நிஜ கல்யாணம் போல், நிஜமான பத்திரிக்கை எல்லாம் அடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளது விஜய் டிவி குழு

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது தமிழ் - சரஸ்வதி திருமண எபிசோடு காட்சிகள் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலின்  புரமோஷனுக்காக சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட பதிவுவை இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.

    விஜய் டிவி என்றாலே வித்தியாசம் தான். அது டிவி சீரியல் ஆகட்டும், ரியாலிட்டி ஷோ ஆகட்டும் ஏதாவது ஒரு வித்தியாசம், புதுமையை காட்டி புரமோஷனில் தூள் கிளப்பி விடுவார்கள். இந்த புரமோஷன் தான் முதலில் மக்கள் மனதில் பதியும். அவர்கள் கொடுக்கும் பில்டப்புக்கே நிகழ்ச்சி அல்லது சீரியலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் தோன்றிவிடும். குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரமோ கன்டெண்ட் தான் அந்த நிகழ்சியின் வெற்றிக்கே காரணம் எனலாம். இப்படி தான் தற்போது தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு வித்தியாசமாக நிஜ கல்யாணம் போல், நிஜமான திருமண பத்திரிக்கை எல்லாம் அடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளது விஜய் டிவி குழு.

    அதாவது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் டாப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தீபக் இதில் லீட் ரோலில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சின்னத்திரை ஆங்கர் நஷ்த்ரா நடித்து வருகிறார். பல்வேறு தடைகளுக்கு பிறகு இவர்களின் கல்யாணம் நடக்கவிருக்கிறது.

    இதையும் படிங்க.. அழகில் அம்மாவை மிஞ்சும் ரேகா மகள்.. அந்த தவறை மட்டும் செய்ய மாட்டாராம்!

    சரஸ்வதி அதிகம் படித்தவர் என பொய் சொல்லி தான் இந்த கல்யாணத்திற்கு தமிழ், கோதை அம்மாவிடம் சம்மதம் வாங்குகிறார். அதுமட்டுமில்லை கோதை அம்மாவுக்கு இது காதல் திரும்ணம் என்பது தெரியாது. அதாவது முன்னரே தமிழும் சரஸ்வதியும் காதலித்தார்கள் என்பது தெரியாது. எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என வில்லி திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார். இத்தனை ட்விஸ்டுகளுடன் சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதற்கிடையில் இந்த சீரியல் எபிசோடு புரமோஷனுக்காக தமிழ் - சரஸ்வதி கல்யாண பத்திரிக்கையை விஜய் டிவி குழு சமூகவலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை திருமண எபிசோடுக்கு  வரவேற்று இருந்தது.



    இதைப் பார்த்த இணையவாசிகள், உடனே “செவ்வாய்க்கிழமை அதுவுமா கல்யாணம் நடத்தலாமா முறையே சரியில்லை” என நக்கல் அடிக்க தொடங்கி விட்டனர். இன்னும் சிலர், இந்த கல்யாணத்திற்கு தீபக்கின் மனைவியும், நக்‌ஷத்ராவின் கணவரும் வருவார்களா” என கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக ஃபேஸ்புக்கில் தான் இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான கமெண்டுகள் குவிந்து வருவதை பார்க்க முடிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி