Home /News /entertainment /

விஜய் டெலி அவார்ட்ஸில் பல விருதுகளை தட்டி தூக்கிய பாக்கியலட்சுமி!

விஜய் டெலி அவார்ட்ஸில் பல விருதுகளை தட்டி தூக்கிய பாக்கியலட்சுமி!

பாக்கிய லட்சுமி

பாக்கிய லட்சுமி

சிறந்த அப்பாவாக பாக்யலட்சுமி சீரியலில் நடித்து வரும் ரோசரியும், சிறந்த அம்மாவாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதை கதாபாத்திரத்தில் நடித்து வரும் மீரா கிருஷ்ணனும் பெற்றுள்ளனர்.

    விஜய் தொலைக்காட்சி ஆண்டுதோறும் வழங்கும் சீரியல்களுக்கான சிறப்பு விருதுகள் யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளன என்ற முழுவிவரம் இதோ...

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2014 ம் ஆண்டு முதல் தொடர்ந்து விஜய் டிவி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்போது 7வது விஜய் டிவி விருதுகள் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விஜய் டி.வி. சீரியல்களுக்கு மட்டுமின்றி ஷோக்கள், விஜய் டி.வி. ஆங்கர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் சிறந்த சீரியலுக்கான விருது இரண்டு சீரியல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை சிறந்த ப்ரைம் டைம் சீரியலுக்கான விருதை ‘பாக்யலட்சுமி’ சீரியல் பெற்றுள்ளது. ப்ரைம் டைம் அல்லாத சிறந்த சீரியலுக்கான விருதினை ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியல் பெற்றுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதினை பாக்கியலட்சுமி சுசித்ரா பெற்றுள்ளார்.

    சிறந்த துணை நடிகைக்கான விருதினை பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ரேஷ்மாவும், சிறந்த ஆண் வில்லன் நடிகருக்கான விருதினை பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் கணவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷும் பெற்றுள்ளனர். சிறந்த எழுத்தாளர், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகள் உட்பட பாக்கியலட்சுமி சீரியல் 6 விருதுகளை பெற்றுள்ளது.

    4 கார் இருக்கும் போது எதுக்காக சைக்கிள்ல போனீங்க? நெல்சன் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்!

    பாரதி கண்ணம்மா சீரியலில் இரட்டை குழந்தைகள் கதாபாத்திரத்தில் நடித்து வரும் லிஷா - ரக்ஷா இருவரும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த புதுமுக கண்டுபிடிப்பிற்கான விருது பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் வினுஷாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த சின்னத்திரை ஜோடிக்கான விருதினை தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இளம் தம்பதியாக நடித்து வரும் தீபக் - நக்ஷத்ரா ஜோடி பெற்றுள்ளனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    ஒரே வார்த்தையில் ஸ்ருதியை ஆஃப் செய்த தருண்! எதிர்பாராத ட்விஸ்ட்டில் மெளனராகம்...

    சிறந்த அப்பாவாக பாக்யலட்சுமி சீரியலில் நடித்து வரும் ரோசரியும், சிறந்த அம்மாவாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதை கதாபாத்திரத்தில் நடித்து வரும் மீரா கிருஷ்ணனும் பெற்றுள்ளனர். சிறந்த மாமியாருக்கான விருது ராஜா ராணி 2 சீரியலில் சிவகாமியாக நடித்து வரும் பிரவீணாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த மகனாக ராஜா ராணி சீசன் 2 தொடரில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்துவும், சிறந்த மருமகளாக மெளன ராகம் 2 சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவீணா தாஹாவும் பெற்றுள்ளனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலைப் பொறுத்தவரை சிறந்த நடிகருக்கான விருதினை கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் பெற்றுள்ளார். சிறந்த இயக்குநருக்கான விருதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குநர் டேவிட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் உள்ள பல விருதுகளை யார் யார் வாங்கியுள்ளனர் என்ற விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி