விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் பலரின் உள்ளம் கவர்ந்த சீரியலாக உள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம் இந்த சீரியலில் லீட் ரோலில் நடிக்கும் பவித்ரா - வினோத் ஜோடி கெமிஸ்ட்ரி தான். அபி - வெற்றி இவர்களின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஹிட் அடிக்க , ரசிகர்கள் இவர்களை கொண்டாடுகின்றனர். அதே போல் சீரியலில் வரும் அடுத்தடுத்த ட்விஸ்டுகளால் நல்ல டி.ஆர்.பி ரேட்டிங்கில் செல்கிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இந்த சீரியலை அதிகம் விரும்பி பார்க்கின்றனர். நேயர் விருப்பமாக பிரைம் டைமிங்கில் தற்போது இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.
கதைப்படி இப்போது வெற்றி போலீசாரால் சுடப்பட்டார். அவரைக் காப்பாற்றி அபி தன்னுடைய வீட்டில் தங்க வைத்து இருக்கிறார். பூங்காவனத்தை போலீஸ் கைது செய்துவிட்டனர். வெற்றி தான் அவர்களின் அடுத்த டார்கெட். வெற்றி மாட்டிக் கொண்டால் அவரை என்கவுண்டரில் போட்டு விடலாம் எனவும் பிளான் செய்கின்றனர். ஆனால் அபி, வெற்றியை காப்பாற்றி நீதிபதி வீட்டிலே அடைக்கலம் கொடுத்து தங்க வைத்து இருக்கிறார். ஒருபக்கம் என்னதான் வெற்றிக்கு அபி மீது கோபம் இருந்தாலும், அவரை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ளும்படியாக ட்ராக் தற்போது சென்றுக் கொண்டிருக்கிறது.
பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலத்திற்கு திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்!
அபி, வெற்றியை ’புருஷ்’ என்று அழைக்கும் காட்சிகள் இணையத்தில் பயங்கர வைரல். இப்படி இருக்கையில், தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ரசிகர்களுக்கு மிகப் பெரிய சரப்பிரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது. இதுக் குறித்த தகவல்கள் புகைப்படத்துடன் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதாவது, தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் இனிமேல் அபி - வெற்றி லவ் ட்ராக் ஒளிப்பரப்பாகவுள்ளதாம்.
மீண்டும் சீரியலுக்கு கம்பேக் கொடுக்கும் ’திருமதி செல்வம்’ அர்ச்சனா?
இது அபியின் கனவா? இல்லை வெற்றி காணும் கனவா? என்று தெரியவில்லை. ஆனால் கிராமத்து செட்டப்பில் அபி பாவாடை தாவணி கட்டிக் கொண்டு ஜொலிக்கிறார். வெற்றியும் வேஷ்டியில் மீசையை முறுக்கி கொண்டு இருவரும் டூயட் பாடுகின்றனர். இந்த எபிசோடுகள் வரும் நாட்களில் சீரியலில் ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள், வெற்றி - அபி டூயட் எபிசோடுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.