Home /News /entertainment /

வெற்றியை பிரியும் அபி! தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கடைசி நேர திருப்பம்!

வெற்றியை பிரியும் அபி! தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கடைசி நேர திருப்பம்!

தென்றல் வந்து என்னை தொடும்

தென்றல் வந்து என்னை தொடும்

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கடைசி நேர திருப்பமாக, அபியின் பிரிவை தாங்க முடியாத வெற்றியின் அம்மாவே ஓடி வந்து அபியை தடுத்து நிறுத்துகிறார்.

    விஜய் தொலைக்காட்சியில் 150 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும்  ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியல், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளிநாட்டில் படித்திருந்தாலும் இந்திய கலச்சாரத்தை மதிக்கும் பெண் அபிநயா, முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக வெற்றி இடையே எதிர்பாராத விதமாக திருமணம் நடந்து விடுகிறது. வெற்றி வலுக்கட்டயமாக தாலி கட்டியிருந்தாலும் அதற்கு மதிப்பு கொடுக்கும் அபிநயா, தனது பெற்றோரை எதிர்த்து வெற்றியுடன் வாழ முடிவெடுக்கிறார்.

    அபிநயாவை வெற்றியின் வீட்டில் அவரது மாமியார் மட்டுமே ஏற்றுக்கொள்கிறார். மாமனார் அபிநயாவை ஏற்க தயாராக இல்லை. இந்நிலையில் வெற்றியை எப்படியாவது திருத்த வேண்டும் என அபி அவருடன்  குடும்பம் நடத்தி வருகிறார்.

    இப்படியும் நடக்குமா? ராட்சத பல்லியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது…

    இதுவரை சீரியல் களம் இப்படி தான் சென்றுக் கொண்டிருந்தது. இதற்கிடையில் டாம் அண்ட் ஜெர்ரி போல் வெற்றி அபி ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்து இருந்தது. இந்நிலையில், அபியை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என வெற்றி பல மாதங்களாக முயற்சி எடுத்து வந்தார். ஆனால் அது நடந்த பாடில்லை. இடையில் வெற்றியை போலீஸில் மாட்டிவிட்ட காரணத்தினால், வெற்றியின் அம்மாவுக்கும் அபி எதிரியானார். அபியை வீட்டில் இருந்து அனுப்ப வேண்டும் என அவரும் வெற்றியிடம் சொல்லிவிட்டார்.

    இப்படி இருக்கையில், வெற்றியின் அண்ணன் 10 லட்சம் பண விஷயத்தில் மாட்ட இப்போது அவர் ஜெயிலில் இருக்கிறார். வெற்றியின் அண்ணன், கலையை மீட்க, வெற்றியும் அபியும் பல முயற்சிகளை எடுத்தனர். கடைசி நேரத்தில் அபியின் அண்ணன், சூர்யா, ஒரு ட்விஸ்ட் வைத்தார். அபி மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தால் கலையை காப்பாற்றலாம் என்கிறார். அதாவது அபி வெற்றியை பிரிந்து வீட்டுக்கு சென்றுவிட்டால் கலை விடுதலையாவார் என்றார். ஆனாலும் அபி விடாபிடியாக கடைசி வரை போராடினார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில்அபி மீண்டும் வீட்டுக்கு கிளம்ப முடிவு எடுத்தார். வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி கொண்டு கிளம்பினார்.

    வெறித்தனமான விஜய் ஃபேன்ஸ் போல… பீஸ்ட் படத்திற்காக பிரபல சின்னத்திரை ஜோடி செய்த காரியம்!

    அப்போது தான், கடைசி நேர திருப்பமாக, அபியின் பிரிவை தாங்க முடியாத வெற்றியின் அம்மாவே ஓடி வந்து அபியை தடுத்து நிறுத்துகிறார். இந்த எபிசோடு நாளைக்கு ஒளிப்பரப்பாகும். அதுமட்டுமில்லை, அந்த 10 லட்சம் பண விஷயத்தில் வெற்றி தனது  அண்ணனை காப்பாற்ற மற்றொரு பிளானையும் செய்து வைத்துள்ளார். அந்த காட்சிகளும் நாளை டெலிகாஸ்ட் ஆகும் எபிசோடில் காணலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி