Home /News /entertainment /

வெற்றி -அபிநயா கெமிஸ்ட்ரி.. டி.ஆர்.பியில் அடித்து மேலே வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்!

வெற்றி -அபிநயா கெமிஸ்ட்ரி.. டி.ஆர்.பியில் அடித்து மேலே வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்!

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்

பீக் டைமில் ஒளிப்பரப்பாகும் சீரியலின் டி.ஆர்.பியை விட தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நல்ல ரேட்டிங்கில் வந்து கொண்டிருக்கிறது.

    கதாநாயகன் வெற்றி - அபிநயா கெமிஸ்ட்ரி ஆன் ஸ்கீரினில் வொர்க்கவுட் ஆக தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் டி.ஆர்.பியில் கலக்கி வருகிறது.

    சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்த முன்னணி சேனல்களில் ஒன்றாக இருக்கிறது விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரசிகர்களின் ஃபேவரெட் லிஸ்டில் இருக்கிறது. அதே போல் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரியல்கள் எப்போதும் டாப்பில் இருக்கின்றன. ரசிகர்களை தக்க வைக்கும் வகையில் பல விறுவிறுப்பான சீரியல்களை களமிறக்கி அனைவரின் கவனத்தையும் பெறுவதில் விஜய் டிவியை அடித்து கொள்ள முடியாது.

    அந்த வகையில் மதியம் 3 முதல் 3.30 வரை ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பாகும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நாயகனாக நடித்து வரும் நடிகர் வினோத் பாபு, வெற்றி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.கதையின் நாயகியாக ஈரமான ரோஜாவே சீரியலில் ஹீரோயினாக நடித்த பவித்ரா ஜனனி, அபிநயா என்ற கேரக்டரில் நடிக்கிறார். அபிநயாவிற்கு கோவிலில் வைத்து கட்டாய தாலி கட்டும் நாயகன் செயல் மூலம் ஒளிபரப்பாவதற்கு முன்பே இந்த சீரியல் ஏகப்பட்ட விமர்சனத்தை பெற்று இருந்தது. மிகவும் பிற்போக்கு தனமான சீரியல் எனவும் பெயர் வைக்கப்பட்டது.

    இந்நிலையில் நாளடையில் எல்லாம் மறந்து சீரியலை ரசிகர்கள் ரசிக்க தொடங்கினர். அதற்கு மிக முக்கியமான காரணம் வெற்றி - அபிநயா கெமிஸ்ட்ரி தான்.வெற்றியை திருத்தி அவனுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்த அபிநயா அப்பாவை எதிர்த்து கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால் வெற்றியின் வீட்டில் அபியை யாரும் சேர்த்து கொள்ளவில்லை. அபிநயாவிடம் வெற்றி வீட்டிலும் யாரும் பேசவில்லை. வெற்றிக்கு அபியை பார்க்க பாவமாக இருந்தாலும், அவளை ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் தவிக்கிறான். இந்த நேரத்தில் தான் அபியை வெற்றியின்  அப்பாவும் அம்மாவும் மருமகளாக அபியை ஏற்றுக் கொண்டனர்ர். இப்போது ஒரே வீட்டில் அபியும் வெற்றியும் வசிக்கிறார்கள்.



    இவர்களின் ஜோடி பொருத்தம், சண்டை, ஆகியவை ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. இதனால் பீக் டைமில் ஒளிப்பரப்பாகும் சீரியலின் டி.ஆர்.பியை விட தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நல்ல ரேட்டிங்கில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சீரியல் குழு மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி