மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸைப் பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனம்

மணி ஹெய்ஸ்ட் 5

மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸைப் பார்க்க, ஊழியர்கள் மொத்தமாக லீவு எடுப்பது, சொல்லாமல் லீவு எடுப்பது ஆகியவற்றை தவிர்க்கவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  புகழ் பெற்ற மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸை பார்ப்பதற்கு நாளை தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு விடுமுறையளித்துள்ளது.

  மணி ஹெய்ஸ்ட் உலக அளவில் புகழ் பெற்ற வெப் சீரிஸ். ஸ்பெனிஷ் மொழி வெப் சீரிஸான இதன் 4-ம் பாகம், கடந்தாண்டு லாக்டவுனில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. ஒரு குழு வங்கியில் கொள்ளையடிப்பதை களமாக வைத்து இயக்கப்பட்ட இந்த வெப் சீரிஸின் கதை பலரையும் கவர்ந்தது.

  மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உலகம் முழுவதும் உள்ள, ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. இதன் 5-ம் பாகத்தின் முதல் 5 எபிசோட்கள் நாளை நெட் ஃபிளிக்ஸில் வெளியாகின்றன. இதைப் பார்க்க, மணி ஹெய்ஸ்ட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.  இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை மையமாக வைத்து இயங்கி வரும் வெர்வ் லாஜிக் என்ற நிறுவனம் வரும் செப்டம்பர் 3-ம் தேதியான நாளை, விடுமுறையை அறிவித்துள்ளது. அந்த விடுமுறைக்கு "நெட்பிளிக்ஸ் அண்ட் சில் ஹாலிடே" என்று பெயரிடப்பட்டுள்ளது. மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸைப் பார்க்க, ஊழியர்கள் மொத்தமாக லீவு எடுப்பது, சொல்லாமல் லீவு எடுப்பது ஆகியவற்றை தவிர்க்கவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ அபிஷேக் ஜெயின் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: