ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இப்படியொரு ட்விஸ்டா! ஜெயிலுக்கு போகும் வெண்ணிலா!

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இப்படியொரு ட்விஸ்டா! ஜெயிலுக்கு போகும் வெண்ணிலா!

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி தொடரில் வெண்ணிலாவை போலீசார் கைது செய்து அழைத்து செல்கின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  காற்றுக்கென்ன வேலி சீரியலின் புரமோவில் வெண்ணிலாவை போலீசார் கைது செய்கின்றனர். சாரதாவும் சூர்யாவும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.

  காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலாவுக்கு பாராட்டு விழா நடக்க இருப்பதை நினைத்து சாரதாவும் சூர்யாவும் பயங்கர சந்தோஷத்தில் இருந்தனர். டெல்லி வரை சென்று பல தடைகளை தாண்டி கோப்பையை ஜெயித்து வந்தார் வெண்ணிலா. அவர் ஜெயிக்க கூடாது என்று அபி, கடத்தல் வரை சென்றார். ஆனாலும் கடைசி நேரத்தில் வெண்ணிலா தப்பித்து வந்து போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார். இதற்காக தான் அவர் படிக்கும் கல்லூரியில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கு மீனாட்சியும் தலைமை தாங்குகிறார்.

  15 கிலோ வரை எடை குறைத்து மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

  நேற்றைய தினம் கல்லூரியில் நடக்கும் பாராட்டு விழாவுக்கு சூர்யாவும் வெண்ணிலாவும் பைக்கில் கிளம்பி சென்றனர். ஒட்டுமொத்த குடும்பமும் கல்லூரிக்கு சென்றுள்ளனர். இப்படி இருக்கையில், வெண்ணிலா மீது மர்ம நபர் ஒருவர் பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறார். அவர் கொடுத்த புகாரின் அடைப்படையில் காலேஜூக்கு வரும் போலீசார் வெண்ணிலாவை கைது செய்கின்றனர். அதாவது வெண்ணிலா பேச்சுப்போட்டியில் பேசியது அந்த நபர் எழுதி கொடுத்தது தான், அதற்கான பணத்தை அவர் தரவில்லை என அந்த நபர் வெண்ணிலா மீது பழி சுமத்துகிறார்.

  ' isDesktop="true" id="756553" youtubeid="0uw5nH0l-oY" category="television">

  கண்டிப்பாக இந்த சதி வேலை மீனாட்சியும் அபியும் சேர்ந்து செய்தது தான் என்பது சாரதாவுக்கு தெரியும். ஆனாலும் இந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெண்ணிலாவை மீட்ட போகிறார்கள் என்று தெரியவில்லை. கல்லூரியில் அனைவரின் முன்பும் வெண்ணிலாவை போலீசார் கைது செய்து அழைத்து செல்கின்றனர். இந்த விழாவுக்கு வெண்ணிலாவின் அப்பா, அம்மாவும் வருகின்றனர். இந்த கஷ்டத்தை தாங்க முடியாமல் வெண்ணிலா கதறி துடிக்கிறார். கண்டிப்பாக இந்த பிரச்சனையில் இருந்து சூர்யா தான் வெண்ணிலாவை காப்பாற்ற போகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv