Home /News /entertainment /

டெலிகாஸ்ட் ஆன முதல் எபிசோடு சர்ச்சையில் சிக்கியது! குக் வித் கோமாளி சீசன் 3ல் என்ன நடந்தது?

டெலிகாஸ்ட் ஆன முதல் எபிசோடு சர்ச்சையில் சிக்கியது! குக் வித் கோமாளி சீசன் 3ல் என்ன நடந்தது?

குக் வித் கோமாளி 3

குக் வித் கோமாளி 3

பரத் செட்டை சுற்றி சுற்றி ஓடினார். செஃப்வும் விடாம் துரத்தி போய் பரத்தை அடித்தார்.

  ரசிகர்களின் பேராதரவுடன் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் முதல் எபிசோடே சர்ச்சையில் சிக்கியுள்ளது. என்ன விவகாரம் அது? வாங்க பார்க்கலாம்.

  ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் டான்ஸ், சிங்கிங் ஷோவுக்கு அடுத்தப்படியாக மிகப் பெரிய ரீச்சை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். காமெடியுடன் சேர்ந்து சமையல் என்ற ஒன்லைனில் நிகழ்ச்சி தொடங்கி மாபெரும் வெற்றி கண்டது. முதல் சீசனில் வனிதா விஜயகுமார் வெற்றி வாகை சூடினார். இரண்டாவது சீசனில் கார குழம்பு கனி டைட்டில் அடித்தார். நிகழ்ச்சியும் டி.ஆர்.பியில் கலக்கியது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 3 ஆவது சீசன் தொடங்கியுள்ளது.

  சனிக்கிழமை மற்றும் ஞாயிறு (நேற்று) முதல் எபிசோடு ஒளிப்பரப்பானது. 10 கோமாளிகள், 10 குக்குகளின் இன்ட்ரோ நடந்தது.
  சின்னத்திரை, வெள்ளித்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். ரோஷினி, மனோ பாலா, வித்யுலேகா, ஸ்ருதிகா என லிஸ்டு நீண்டது. அதே போல் இந்த சீசனில் கோமாளியாக புகழ் இல்லை என்பது முன்பே தெரிந்து விட்டது. அதற்கு பதிலாக சூப்பர் சிங்கர் பரத், மூக்குத்தி முருகன், குரேஷி ஆகியோர் புதிய கோமாளிகளாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.

  முதல் நாள் 10 கோமாளிகளின் அறிமுகம் ஆட்டம், பாட்டம் என தொடங்கியது. இதில் சூப்பர் சிங்கர் பரத்தின் இண்ட்ரோ சற்று வித்தியாசமாக இருந்தது. சூப்பர் சிங்கர் ஷோவில் எப்படி பிரியங்கா, பரத்தை வச்சி செய்தாரோ அதற்கு சற்றும் குறைவு இல்லாமல் வெட்டுக்கிளி பாலா, குரேஷி, சக்தி ஆகியோர் பரத்தை கலாய்த்து தள்ளினர். அவர்களுடன் செஃப் வெங்டேஷமும், தாமுவும் சேர்ந்து பரத்தை கலாய்த்தனர்.

  இதையும் படிங்க.. விஜய் டிவி குக் வித் கோமாளியில் சூர்யா பட ஹீரோயினா? சொல்லவே இல்லை!

  இப்படி இருக்கையில், பரத், செஃப் வெங்கடேஷை பட்டை கலாய்க்க, போன சீசன்களில் புகழ், பாலா செஃப் வெங்கடேஷிடம் அடி வாங்கியது போல பரத்தும் அடி வாங்கினார். குச்சியை வைத்து செஃப் துரத்த, பரத் செட்டை சுற்றி சுற்றி ஓடினார். செஃப்வும் விடாம் துரத்தி போய் பரத்தை அடித்தார். இந்த காட்சிகள் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. பரத்தை செஃப் அடித்தது பார்ப்பதற்கு மிகவும் மோசமாக இருந்ததாக பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர். அதாவது குக் வித் கோமாளி மீண்டும் தொடங்கியது சந்தோஷம் தான். ஆனால் வெங்கடேஷ் பட், கோமாளிகளை அடிப்பதை குறைத்தால் நன்றாக இருக்கும் என கூறி இருந்தனர்.  இந்த சர்ச்சைக்கு பட் உடனே முற்றுப்புள்ளி வைத்தார். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுப்பற்றி பேசியுள்ள அவர், பொழுதுபோக்கு நிகழ்ச்சியை வெறும் டிவி நிகழ்ச்சியாக மட்டுமே பாருங்கள் என்றும், உண்மையில் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் அடிக்கவில்லை என்றும் அது எனது நோக்கம் இல்லை எனவும் செட்டில் நடப்பவை எல்லாமே வெறும் ஃபன் மற்றும் நகைச்சுவை மட்டுமே. அதுவும் உங்களை மகிழ்விக்க மட்டுமே. என்று கூறியுள்ளார். செஃப் வெங்கடேஷின் இந்த விளக்கத்தை குக் வித் கோமாளி ரசிகர்கள்  பலரும் ரசித்து வரவேற்று ஆதரவு அளித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Cook With Comali Season 2, TV Serial, Vijay tv

  அடுத்த செய்தி