• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல சீரியல் நடிகர் - சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து திடீர் விலகல்!

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல சீரியல் நடிகர் - சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து திடீர் விலகல்!

வெங்கட் ரங்கநாதன்

வெங்கட் ரங்கநாதன்

சன் டிவி-யில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ரோஜா சீரியலில் அஸ்வின் என்ற கேரக்டரில் நடித்தும் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

  • Share this:
சின்னத்திரை ரசிகர்களை மகிழ்விக்கும் டிவி நிகழ்ச்சிகளில் சீரியல்களுக்கு முக்கிய பங்கு உண்டு. தினமும் விறுவிறுப்பாக நகரும் கதைகளை கொண்ட பல சீரியல்கள், ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்து விடுகின்றன. பிரபல தமிழ் சேனல்களான சன் டிவி மற்றும் ஸ்டார் விஜய் சேனல்களில் பல ஹிட் சீரியல்கள் ஓடி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சன் டிவி-யில் சூப்பர் ஹிட் சீரியலான ரோஜா மற்றும் ஸ்டார் விஜய் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய இரண்டிலுமே பங்கு பெற்று நடித்து வரும் நடிகர் ஒருவர் இந்த 2 சீரியலில் ஒன்றிலிருந்து விலகுவதாக சோஷியல் மீடியா மூலம் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீரியல்கள் மட்டுமல்ல சீரியல்களில் நடிக்கும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்து உள்ளனர். பிரபல சீரியல் நடிகரான வெங்கட் ரங்கநாதன் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அண்ணன் - தம்பிகளின் பாசம் மற்றும் கூட்டு குடும்ப சிறப்புகளை எடுத்து காட்டும் வகையில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸில் தனது இயல்பான நடிப்பின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளார் நடிகர் வெங்கட் ரங்கநாதன்.

அதே போல சன் டிவி-யில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ரோஜா சீரியலில் அஸ்வின் என்ற கேரக்டரில் நடித்தும் ரசிகர்களை ஈர்த்துள்ளார். டிவி ஷோவில் ஆங்கராக அறிமுகமான இவர், 2006-ல் கனா காணும் காலங்களில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் நடிகர் ஆனார். தொடர்ந்து ஆண் பாவம், புகுந்த வீடு, மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் 2018 முதல் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸின் ஜீவா கேரக்டர் தான் இவரை தமிழக ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற செய்தது.



இதனிடையே த்னது இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ள நடிகர் வெங்கட் ரங்கநாதன். அதில் " ஹலோ எனது ரசிகர் குடும்பம். நான் ஒரு செய்தியுடன் வந்துளேன். இது சிலருக்கு வருத்தமான செய்தியாகவும் சிலருக்கு நல்லதாகவும் இருக்கலாம். உங்கள் அஸ்வின் ரோஜா சீரியலை விட்டு நிரந்தரமாக விலகுகிறேன்.

Also read... வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை - சீமானை கிண்டல் செய்த சூர்யா படம்...!

உங்களை ஏமாற்றுவதற்கு மன்னிக்கவும். நீங்கள் என்னை ஜீவாவாக தொடர்ந்து சின்னத்திரையில் பார்க்கலாம். அஸ்வின் கேரக்டருக்கு அன்பையும் ஆதரவையும் அளித்த அனைவருக்கும் நன்றி. இதே அன்பையும் ஆதரவையும் என்றென்றும் பெற விரும்புகிறேன் என் அன்பு ரசிகர்களே" என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அந்த போஸ்ட்டில் என்ன காரணத்திற்காக ரோஜா சீரியலை விட்டு வெளியேறுகிறார் என்பதை நடிகர் வெங்கட் ரங்கநாதன் குறிப்பிடவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: