• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரசவத்திற்கு பிறகு வெண்பாவிடம் இருந்து இப்படி ஒரு பதிவா?

பிரசவத்திற்கு பிறகு வெண்பாவிடம் இருந்து இப்படி ஒரு பதிவா?

வெண்பா

வெண்பா

வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா ஒரு வாரத்தில் உடற்பயிற்சிகளில் ஈடுபட காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
    விஜய் டிவி சீரியல்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஒரு சீரியலாக இருந்து வருகிறது பாரதி கண்ணம்மா. திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி, சமீபத்தில் சீரியலை விட்டு விலகினார். நடிகை ரோஷினி சீரியலை விட்டு விலகியது சீரியல் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றமடைய செய்து இருக்கிறது. இந்த சீரியலில் வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ள மற்றொரு கேரக்டர் வெண்பா.

    பாரதி கண்ணம்மா புகழ் வெண்பா அதாவது நடிகை ஃபரினா ஆசாத் - உபைத் ரஹ்மான் தம்பதிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்திருப்பதை சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தனர். தனது வாழ்க்கையில் நடக்கும் முக்கிய தருணங்கள்பற்றி தனது ரசிகர்களுக்கு சோஷியல் மீடியாவில் அவ்வப்போதுஅப்டேட் செய்து வரும் நடிகை ஃபரினா ஆசாத், தான் எதிர் கொண்ட பிரசவ அனுபவம் ,மகனை பெற்றெடுத்த தருணம் மற்றும் குழந்தையை கையில் ஏந்தி இருக்கும் மகிழ்ச்சி பற்றிய நினைவுகளை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார். MY LABOUR STORY என்று கேப்ஷனிட்டு அந்த அனுபவத்தை பகிர்ந்து உள்ளார்.

    அதில் கர்ப்பமாக இருப்பதற்காக வேலைகளை விட வேண்டும் அல்லது வேலைகளை செய்யாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. கர்ப்ப காலம் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்து இயங்கியது, பிரசவத்தின் கடைசி வாரம் வரை தொழில் வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தது, தினசரி உடற்பயிற்சிகள் மற்றும் யோகா போன்றவை எனக்கு கர்ப்பம் மற்றும் மகப்பேறின் அற்புத அனுபவத்திற்கு மிக நன்றாக உதவியது. என்னால் முடியும் என்றால், நீங்களும் செய்யலாம்.



     




    View this post on Instagram





     

    A post shared by farina azad (@farina_azad_official)






    கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் உங்களை முழுவதும் மாற்றி கொள்ள வேண்டும் என்பதல்ல! கர்ப்பம் என்பது வாழ்க்கையின் ஒரு கட்டம், எனவே நீங்கள் நீங்களாகவே இருங்கள், அதை எதிர்கொள்ளுங்கள். சுந்தரம் மருத்துவ அறக்கட்டளையின் டாக்டர் உமா அவர்களுக்கு நன்றி. கர்ப்பத்தின் கடைசி தருணம் வரை என்னை வெண்பாவாக ஸ்கிரீனில் தோன்ற வைத்திருந்ததற்கு, என்னை பற்றிய எல்லாவிதமான கருத்துக்களையும் உடைத்ததற்கும் சீரியல் டைரக்டர் பிரவீன் பென்னட்டுக்கும் நன்றி என நடிகை ஃபரினா ஆசாத் குறிப்பிட்டு இருக்கிறார்.

    தவிர என்னை முழு நேரம் மோட்டிவேட் செய்து பயிற்சி அளித்த கோச் திலக்கிற்கு நன்றி. மீண்டும் ஒரு வாரத்தில் உடற்பயிற்சிகளில் ஈடுபட காத்திருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் அன்பு மற்றும் ஆதரவு தரும் உங்களுக்கு எனது முத்தங்கள் என்று தனது கணவர் உபைத் ரஹ்மானுக்கும் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார் நடிகை ஃபரினா ஆசாத். இந்த போஸ்ட்டை அடுத்து ஃபரினாவுக்கு இருக்கும் வேலையின் மீதான ஆர்வத்திற்காக ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த கலைஞர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: