Home /News /entertainment /

வெண்பா - யாழினி பற்றிய உண்மை தெரிய வரும் நேரம்.. சித்தி 2 வில் ட்விஸ்ட்!

வெண்பா - யாழினி பற்றிய உண்மை தெரிய வரும் நேரம்.. சித்தி 2 வில் ட்விஸ்ட்!

சித்தி 2

சித்தி 2

சித்தி 2 வில் வெண்பா - யாழினி இருவரும் இந்த உண்மையை எப்படி ஏற்றுக் கொள்ள போகிறார்கள்?

    சித்தி 2 சீரியலில் வரும் வார எபிசோடில் வெண்பா - யாழினி பிறப்பு பற்றி மிகப் பெரிய உண்மை கவினுக்கு தெரிய போவதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன.

    சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சித்தி 2 சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நடிகை ராதிகா சீரியலில் இருந்து பாதிலேயே வெளியேறி விட்டாலும் சித்தி 2வின்  விறுவிறுப்பான கதை காரணமாக சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 'சித்தி 2' சீரியலில் வெண்பா என்ற கேரக்டரில் நடிகை ப்ரீத்தி ஷர்மா ஹீரோயினாகவும், கவின் என்ற கேரக்டரில் நடிகர் நந்தன் லோகநாதன் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர்.இவர்களின் கெமிஸ்ட்ரி சோஷியல் மீடியாவில் பயங்கர ஹிட். இருவரும் நிஜத்திலும் காதலிப்பதாக கூட வதந்திகள் பரவின.

    சீரியல் நடிகை காவ்யா அறிவுமணியின் பர்த்டே கொண்டாட்டம் – வைரலாகும் போட்டோக்கள்!

    இந்நிலையில் தற்போது சீரியலின் கதைக்களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வெண்பா காணமால் போனதில் தொடங்கி அவருக்கு கத்தி குத்து பட்டு ஆஸ்பிட்டலில் இருந்த வரைக்கும் கவின் மிகப் பெரிய சப்போர்ட்டாக வெண்பா பக்கம் நின்றார்.அம்மாவையும் எதிர்த்துக் கொண்டு வெண்பாவுக்காக சண்டைக்கு சென்றார். கவினின் அம்மா மல்லிகா, இப்போது வரை வெண்பாவை ஏற்றுக் கொள்ளவில்லை. வெண்பாவை விஷம் தடவிய கத்தியால் குத்த சொன்னதே மல்லிகா - யாழினி ஏற்பாடு தான். யாழினி கெளரியின் மகள் இல்லை, வெண்பா தான் நிஜத்தில் கெளரியின் மகள் என்ற விஷயம் இப்போது வரை யாருக்கும் தெரியாது.



     




    View this post on Instagram





     

    A post shared by TAMILTVFANZCLUB (@tamiltvfanzclub)






    இந்த உண்மை தெரிந்த நபர் வெண்பாவின் அப்பா, அதாவது மல்லிகாவின் அண்ணன். இப்படி இருக்கையில் இந்த உண்மை வரும் வாரங்களில் கவினுக்கு தெரிய வரப்போவதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன. இந்த விஷயத்தை வெண்பாவின் அப்பா தான் கவினிடம் சொல்ல போகிறார். உண்மை தெரிந்த பிறகு கவினின் ரியாக்‌ஷன் என்ன?

    ரியாக்‌ஷன்களால் ரசிகர்களை கவரும் எக்ஸ்பிரஷன்ஸ் குயின் ராஷ்மிகா மந்தனா!

    வெண்பா - யாழினி இருவரும் இந்த உண்மையை எப்படி ஏற்றுக் கொள்ள போகிறார்கள்? ஏற்கெனவே கவினை மிஸ் பண்ணிவிட்டதாக கதறி அழும் யாழினி, இப்போது கெளரிக்கு சொந்த மகள் இல்லை என்ற உண்மை தெரிந்தால் என்ன செய்வார்? போன்ற பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. இவற்றுக்கு வரும் வாரங்களில் பதில் கிடைத்துவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Radhika sarathkumar, Sun TV, TV Serial

    அடுத்த செய்தி