Home /News /entertainment /

பாரதிக்கும் வெண்பாவுக்கும் கல்யாணமா? அடுத்த ட்விஸ்டுக்கு தயாரான பாரதி கண்ணம்மா தொடர்!

பாரதிக்கும் வெண்பாவுக்கும் கல்யாணமா? அடுத்த ட்விஸ்டுக்கு தயாரான பாரதி கண்ணம்மா தொடர்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதியுடன் ஏற்பாடு செய்து கொண்ட திருமணம் நின்று விட்டதால் இந்த முறை பாரதியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வெண்பா பிளான் செய்கிறார்

    பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிந்து தற்போது பாரதியின் கல்யாண கதை சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த முறை இந்த பேச்சை எடுத்து இருப்பது வெண்பாவோ, சவுந்தர்யாவோ இல்லை, பாரதியின் செல்ல மகள் ஹேமா தான்.

    பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடில் பாரதிக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் ஹேமா. அதற்கு காரணம் ஹேமா, பாரதி படும் வேதனைகளை அதிகம் பார்ப்பது. பாரதி தனக்கு யாரும் இல்லை என அழுவது, அடிக்கடி சாப்பிடாமல் கோபித்து கொள்வது, தனியாக வாழ்வது என ஹேமாவுக்கு பாரதி மீது அக்கறையும் கவலையும் வந்து விட்டது. அதனால் தன்னுடைய ஸ்கூல் ஃபிரண்ட் மீனாவுடை அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டது போலவே, பாரதியும் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார்.

    இதையும் படிங்க.. தாமரையுடன் பேசினாரா சிவகார்த்திகேயன்? பிக் பாஸ் அல்டிமேட்டில் தெரிய வரும் அடுத்தடுத்த உண்மைகள்!

    இதைப்பற்றி பாரதியிடம் போய் நேரடியாக பேசுகிறார். ஹேமாவுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்துவிட்டது வில்லி வெண்பாவுக்கு தெரிந்துவிட்டது. உடனே பாரதி மீது அக்கறை இருப்பது போல் சாப்பாடு ஆர்டர் செய்வது, பாரதி மீது ஓவர் அக்கறை காட்டுவது என நடிக்க தொடங்குகிறார். இதைப் பார்த்து ஹேமா மயங்கி, பாரதிக்கு தன்னை திருமணம் செய்து வைப்பார் என்ற நினைப்பு வெண்பாவுக்கு. ஆனால் ஹேமா மனதில் தோன்றுவது வெண்பா இல்லை. கண்ணம்மா தான். அந்த காட்சிகள் வரும் நாட்களின் ஒளிப்பரப்பாகும். ஏற்கனெவே ஒருமுறை பாரதியுடன் ஏற்பாடு செய்து கொண்ட திருமணம் நின்று விட்டதால் இந்த முறை பாரதியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வெண்பா பிளான் செய்கிறார். அதற்கு ஹேமாவை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என நினைக்கிறார்.

    இதையும் படிங்க.. மல்லிகாவின் மகள் தான் சத்யா என்ற உண்மையை கண்டுப்பிடித்தாரா ஸ்ருதி?

    இது ஒருபுறம் இருக்க, கண்ணம்மாவை பற்றி அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தப்பு தப்பாக பேசி வருகின்றனர். இதைப்பற்றி குமார் அண்ணா கண்ணம்மாவிடம் சொல்லி வேதனை படுகிறார். அதுமட்டுமில்லை, இதைக்கேட்டு கண்ணம்மா அழ, லட்சுமிக்கு கோபம் வந்து விடுகிறது. அவர்களிடம் போய் சண்டை போடலாம் என்றும் குமார் அண்ணாவை கூப்பிடுகிறார். ஆனால் கண்ணம்மாவோ வேண்டாம் என்கிறார். இதனால் லட்சுமி அதிரடியான முடிவு ஒன்றை எடுக்கிறார். கண்ணம்மாவுக்கு 2வது கல்யாணம் செய்து வைக்கலாம் என்பது தான் அந்த முடிவும். ஆக மொத்தத்தில் ஹேமாவும் லட்சுமியும் சேர்ந்து பாரதிக்கும் கண்ணம்மாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க போகிறார்கள். இந்த ஒன்லைனை வைத்து இயக்குனர் அடுத்த 6 மாதத்திற்கு கதையை நகர்த்துவார் என்று தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி