• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அது எங்க குழந்தை இல்லை.. வெண்பா கணவரின் பயங்கர கோபத்துக்கு என்ன காரணம்?

அது எங்க குழந்தை இல்லை.. வெண்பா கணவரின் பயங்கர கோபத்துக்கு என்ன காரணம்?

வெண்பா கணவர்

வெண்பா கணவர்

வெண்பாவாக பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் நடிகை ஃபரீனா தான் 7 மாத கர்ப்பிணி என்பதை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்

  • Share this:
    யூடியூப் சேனல்களில் காட்டப்பட்டு வரும் குழந்தையின் போட்டோ உண்மையில் தங்கள் மகன் அல்ல என்று நடிகை ஃபரீனாவின் கணவர் தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் மிகபெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருகின்றனர். எனினும் இந்த சீரியலில் வெண்பா என்ற வில்லி வேடத்தில் கலக்கி வரும் பிரபல சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத்திற்கு நிஜ வாழ்வில் குழந்தை பிறந்துள்ள செய்தி சின்னத்திரை ரசிகர்களை சந்தோஷமடைய செய்து இருக்கிறது. கண்ணம்மாவாக நடித்து வந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் திடீரென சீரியலை விட்டு விலகி விட்டாலும், தன்னையும் பாரதியையும் சதி செய்து வேண்டுமென்றே பிரித்து வைத்த வெண்பாவுடன் அவர் மோதும் காட்சிகள் அனைத்தும் மிகவும் விறுவிறுப்பாகவே இருந்தன.

    பாரதி கண்ணம்மா சீரியலுக்கு நடிகை ரோஷினி எவ்வளவு ரசிகர்களை ஈர்த்து தந்தரோ அதே அளவிற்கு நடிகை ஃபரீனா ஆசாத்தும் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டி வருகிறார். இவர் 1990-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி சென்னையில் பிறந்தவர் ஆவார். சென்னையிலேயே பள்ளிப்படிப்பை முடித்த இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.

    பின்னர் மாடலிங் செய்ய தொடங்கினார். தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களுக்கான ஆடிஷன்களில் பங்கேற்றார். சின்னத்திரையில் முதன்முதலாக குக்கிங் ஷோ ஒன்றின் மூலம் அறிமுகமாகி , அதன் பிறகு படிப்படியாக வளர்ந்து சீரியலுக்குள் நுழைந்தவர் நடிகை ஃபரீனா. சன் டிவி-யில் ஒளிபரப்பான அழகு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை ஃபரீனா ஆசாத்.

    இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் தனது நீண்ட நாள் காதலரான ரஹ்மான் உபைத்தை திருமணம் செய்து கொண்டார். டாக்டர் வெண்பாவாக பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் நடிகை ஃபரீனா தான் 7 மாத கர்ப்பிணி என்பதை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. எனவே சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நடிகை ஃபரீனா ஆசாத் - ரஹ்மான் உபைத் தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

    இதனிடையே ஃபரீனாவிற்கு குழந்தை பிறந்த செய்தியை பல்வேறு யூடியூப் சேனல்கள் இது தான் ஃபரீனாவின் குழந்தை என்று போட்டோவுடன் ஷேர் செய்தன. ஆனால் பல யூடியூப் சேனல்களில் காட்டப்பட்டு வரும் குழந்தையின் போட்டோ உண்மையில் தங்கள் மகன் அல்ல என்று நடிகை ஃபரீனாவின் கணவர் தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by farina azad (@farina_azad_official)






    எனவே யூடியூப் சேனல்களில் காட்டப்படும் தவறான போட்டோவை ரசிகர்கள் யாரும் எங்கள் குழந்தை என நினைத்து பிறருக்கு ஷேர் செய்ய வேண்டாம். நாங்கள் எங்கள் குழந்தையின் போட்டோவை அதிகாரப்பூர்வமாக ஷேர் செய்யும் வரை இது போன்ற வீடியோக்களை நம்பாதீர்கள் என்றும் நடிகை ஃபரீனாவின் கணவர் கேட்டு கொண்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: