ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'வெல்லும் திறமை' பிரம்மாண்ட இறுதி போட்டி! ஜெயிக்க போவது யார்?

'வெல்லும் திறமை' பிரம்மாண்ட இறுதி போட்டி! ஜெயிக்க போவது யார்?

வெல்லும் திறமை

வெல்லும் திறமை

வெல்லும் திறமை நிகழ்ச்சியின் வெற்றிக் கோப்பையை பெற போவது யார்? ஆர்வத்தை தூண்டும் இறுதிக்கட்டம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 30) அன்று வெல்லும் திறமை நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி டெலிகாஸ்ட் ஆகிறது.

  தென்னிந்தியாவின் தலைசிறந்த திறமைசாலிகளை அடையாளம் காணும் வகையில் நடத்தப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வெல்லும் திறமை நிகழ்ச்சியின் பிரமாண்டமான இறுதிப் போட்டி அக்டோபர் 30, ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பிரபல நடிகை நிக்கி கல்ராணி, பிரபல நடிகரும் தற்காப்பு கலை நிபுணருமான ஷிஹான் ஹுசைனி மற்றும் பிரபல நடன இயக்குனரான ஸ்ரீதர் மாஸ்டர் நடுவர்களாக பங்கேர்க்கும் இந்த இறுதி போட்டியில் சுவரசியாமான தனித்திறமைகளை கொண்டு போட்டியாளர்கள் பார்வையாளர்களை மெருகூட்ட இருக்கிறார்கள்

  vellum thiramai colors tamil finals telecasting time vellum thiramai reality show title winner
  வெல்லும் திறமை நடுவர்கள்

  இறுதி இறுதி போட்டியை காண கலர்ஸ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். இது குறித்து பேசிய நடிகை நிக்கி கல்ராணி, “நாட்டின் மூலை முடுக்கிலிருந்து ஒவ்வொரு போட்டியாளர்களின் திறமைகளை கொண்டு வந்த பன்முகத்தன்மை கொண்ட ஒரு அற்புதமான நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். கலர்ஸ் தமிழ் சேனலானது, வெல்லும் திறமை மூலம் திறமையான வல்லுனர்களின் அதிகார மையத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இந்த அற்புதமான நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைகொள்கிறேன்.

  40 வயதில் ஆண் குழந்தைக்கு தாயான விஜய் டிவி சீரியல் நடிகை!

  இது குறித்து நடிகர் ஷிஹான் ஹுசைனி கூறுகையில், “வெல்லும் திறமையின் பயணம் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி. இந்த நிகழ்ச்சியின் நடுவராக நான் இருந்து , இந்த இளம் பிரகாசமான போட்டியாளர்கள் காலப்போக்கில் தங்கள் கைவினைத்திறனை மேம்படுத்துவதைக் கண்டது நம்பமுடியாத அனுபவமாக உள்ளது. இந்த இறுதிப் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது சிறப்பு வழங்க வேண்டும், மேலும் அவர்களின் திறமை சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களை பெரிய தளங்களுக்குத் கூட்டிச் செல்லும். மேலும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது, மேலும் இந்த போட்டியாளர்களின் வெற்றிக்கான படிக்கட்டுகளாக கலர்ஸ் தமிழ் இருக்கும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். "

  vellum thiramai colors tamil finals telecasting time vellum thiramai reality show title winner
  நடிகை நிக்கி கல்ராணி

  மேலும், நடன இயக்குனர் ஸ்ரீதர் பேசுகையில், “திறமையை தவிர்த்து பலதரப்பட்ட கலை வடிவங்களை கொண்டு வரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பது உண்மையிலேயே ஒரு பாக்கியம். முழுப் பயணத்திலும் பல தடைகளைக் கடந்து வந்து திறமைகள் நிறைந்த கலைஞர்களைப் பார்ப்பது ஒரு அற்புதமான பயணமாகும். கலர்ஸ் தமிழ் குழுவில் நடுவராக என்னைத் தேர்ந்தெடுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திறமையான நபர்களின் தொகுப்பைக் கண்டேன், மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற அற்புதமான நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக சேனலுடனான எனது தொடர்பை எதிர்நோக்குகிறேன்‌ என்றார்.

  வெல்லும் திறமையின் வெற்றிக் கோப்பையை யார் பெற போகிறார்கள் என்பதை பார்க்க, அக்டோபர் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியை பாருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Television