விஜய் டிவியில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 'வேலைக்காரன்' சீரியலின் அறிமுக ப்ரோமோவை பார்த்த எவருமே அது சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படமான முத்து-வின் 'சீரியல் வெர்ஷன்' என்பதை அறிந்திருக்க முடியும்.
ஒரு பெரிய ஜமீன் குடும்பம், அதை ஒரு வயதான பெண்மணி கட்டி ஆளுகிறார், அவருக்கு ஒரு பொறுப்பில்லாத மகன் இருக்கிறார். அவர் தான் ஜமீனுக்கே வாரிசு; அதே வீட்டில் துறுதுறுவென, மிகவும் பாசமான ஒரு வேலைக்காரன் இருக்கிறான்; ஆனால் அவன் தான் ஜமீனின் உண்மையான வாரிசு. இந்த விடயம் ஜமீனை கட்டிபாதுகாத்து வரும் அந்த வயதான பெண்மணியை தவிர்த்து வேறு யாருக்குமே தெரியாது. இதுதான் வேலைக்காரன் சீரியலின் அறிமுக ப்ரோமோ வெளிப்படுத்திய விடயங்கள் - இந்த கதையை எங்கோ கேட்டதும், பார்த்ததும் போல இருக்கிறதா?
நிச்சயம் இருக்கும்! இது கடந்த 1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில், பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கித்தில் வெளியான 'முத்து' திரைப்படத்தின் மூலக்கதை ஆகும். இதே மேட்டரை கொஞ்சம் அப்படி இப்படி என்று மாற்றி, மிகவும் தைரியமாக ஒளிபரப்ப்பட்ட சீரியல் தான் வேலைக்காரன்.
"அரைச்ச மாவையே அரைக்கும் இது போன்ற கதையெல்லாம் 4 மாசம் கூட தாக்கு பிடிக்காது" என்பது போன்ற பல விமர்சனங்களை தாண்டி தற்போது வேலைக்காரன் சீரியல் விஜய் டிவியின் நம்பர் 1 மதிய நேர சீரியலாகும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் வேலைக்காரன் சீரியலில் வேலன் என்கிற கதாபாத்திரத்தில் சபரி, வள்ளி என்கிற கதாபாத்திரத்தில் கோமதி ப்ரியா, விசாலாட்சி என்கிற கதாபாத்திரத்தில் மலையாள சினிமா நடிகை சோனா நாயர், ராகவன் என்கிற கதாபாத்திரத்தில் சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர்.
Read More : அறந்தாங்கி நிஷாவின் மாடர்ன் கிச்சன் டூர் ! வைரலாகும் வீடியோ..
உண்மையான ஜமீன் வாரிசு வேலன் தான் என்பதை அறிந்த ராகவன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அனைத்தையும் வேலனிடமே ஒப்படைத்து விட்டு ஒரு சாதாரணமான ஆளாக அவனுடனேயே வாழ்கிறான். இதனாலேயே, வேலன் தான் காதலிக்கும் வள்ளியை ராகவனுக்காக விட்டுக்கொடுக்க முடிவுவெடுக்கிறான்; திருமண வேலைகளும் படு வேகமாக நடந்தன. ஆனால் ஒருகட்டத்தில் வேலன், குடிபோதையில் வள்ளி மீதான தன் காதலை பற்றி ராகவனிடமே உளறிவிட, சுதாரித்து கொண்ட ராகவன் சரியாக வள்ளி கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன் "வேலனும் வள்ளியும் காதலிக்கிறார்கள்" என்கிற உண்மையை கல்யாண மேடையில் வைத்தே போட்டு உடைக்கிறான்.
இதெல்லாம் ஒருபக்கம் நடக்க, ராகவனை திருமணம் செய்ய இஷ்டம் இல்லாத, வேலன் மீதான காதலை மறக்க முடியாத வள்ளி விஷம் குடித்து விட்டே மணமேடைக்கு வருகிறாள். வள்ளி உயிர் பிழைப்பாளா? ராகவன் வேலனுக்காக மீண்டும் விட்டுக்கொடுப்பாரா? வேலன் - வள்ளி திருமணம் நடக்குமா? இப்படி பல ட்விஸ்ட்களுடன் வேலைக்காரன் சீரியலின் கதை, வேற லெவலில் சூடுபிடிக்க, இந்த விஜய் டிவி சீரியலின் டெலிவிஷன் ரேட்டிங்கும் எகிறியது. அந்த டெலிவிஷன் ரேட்டிங்கின் (டிஆர்பி) அடிப்படையியேயே வேலைக்காரன் சீரியல் ஆனது, மதிய வேளையில் ஒளிபரப்பப்படும் நம்பர் 1 விஜய் டிவி சீரியலாகி உள்ளது. முன்னதாக 'காற்றுக்கென்ன வேலி' சீரியலுக்கும் கூட இதே அந்தஸ்து கிடைத்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.