பல்வேறு அவமானங்கள்.. பறிப்போன வாய்ப்புகள்! கண்கலங்கிய வேலைக்காரன் சீரியல் வேலன்!

வேலைக்காரன் சீரியல் சபரி

ஆர்ஜே, விஜே, மாடல், மோட்டிவேஷன் ஸ்பீக்கர் என பலமுகங்கள் இவருக்கு உண்டு.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வேலைக்காரன் சீரியலில் வேலன் ரோலில் நடிக்கும் நடிகர் சபரி பற்றி பலருக்கும் தெரியாதவை.

  விஜய் டிவி சீரியல் நடிகர்கள் என்றால் அவர்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். மற்ற சேனல் சீரியல் நடிகர்களை காட்டிலும் விஜய் டிவி சீரியல் நடிகர்கள் எளிதில் மக்கள் மனதை கவர்ந்து வெள்ளித்திரை வரை சென்று வந்துவிடுகின்றனர். அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் லைக்ஸ்களால் குவியும். அந்த வகையில் பெரிய திரையில் துணை நடிகராக இருந்து பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு சீரியலில் லீட் ரோலில் நடிக்கும் நடிகர் சபரி கெரிய லைஃப் பற்றி தான் பார்க்க போகிறோம்.

  விஜய் டிவியில் மதியம் ஒளிப்பரப்பாகும் வேலைக்காரன் சீரியல் லாக்டவுண் காலக்கட்டத்தில் தொடங்கப்பட்டது. தற்போது வரை டி.ஆர்.பியில் நல்ல ரேட்டிங்கில் சென்றுக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த சீரியல் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தின் அட்டு காப்பி என பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. பின்பு வேலனாக நடிக்கும் சபரியின் நடிப்பு மக்களை கவர, கொஞ்சம் கொஞ்சமாக சீரியலை மக்கள் விரும்பி பார்க்க தொடங்கினர்.
  வேலனின் நிஜப்பெயர் சபரிநாதன். ஆர்ஜே, விஜே, மாடல், மோட்டிவேஷன் ஸ்பீக்கர் என பலமுகங்கள் இவருக்கு உண்டு.

  சினிமாவில் சொல்லிக் கொள்ளும்படி நல்ல நடிகராக வேண்டும் என்ற கனவோடு ஓடி கொண்டிருந்தவர் முதன் முதலில் ஷார்ட் ஃபிலிம்களை தேர்வு செய்து நடித்தார். மௌனம் பேசியதே ஷார்ட் ஃபிலிம் நல்ல ரீச் கொடுத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி விளம்பரங்கள், மாடலிங் செய்து வந்தார். ஸ்மைல் சேட்டை யூடியூப் சேனலில் ஒளிப்பரப்பான 143 with sabari வெப் சீரியலிலும் நடித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அப்போது தான் வெள்ளித்திரையில் கால் பதிக்க சபரிக்கு வாய்ப்பு கிடைத்தது. விஐபி 2, துப்பறிவாளன், சைக்கோ, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, நட்பே துணை என பல படங்களில் துணை நடிகராகவும் நடித்தார். ஆனாலும் அவர் நினைத்த வெற்றி அவருக்கு கிட்டவில்லை. விஜய் டிவியின் பிரபல இயக்குனர் பிரவீன் இவரின் நெருங்கிய நண்பர் ஆவார். அவர் மூலம் சபரிக்கு இதற்கு முன்பே ஏகப்பட்ட சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் சரவணன் மீனாட்சி சீரியலில் ரியோவுடன் சேர்ந்து நடிக்க இருந்த வாய்ப்பு பறிபோனது.  அதற்கு அடுத்து என் பொம்மக்குட்டி அம்மாவுக்கு சீரியலிலும் லீட் ரோல் வாய்ப்பு தடையானது, சொல்லப்போனால் ராஜா ராணி 2 சீரியலில் சரவணனாக நடித்து சில காட்சிகள் எடுத்த பின்பு கடைசி நேரத்தில் இவருக்கு பதில் சித்து தேர்வானர். இப்படி ஏகப்பட்ட ஏமாற்றங்கள், அவமானங்களை சந்தித்துக் கொண்டிருந்த சபரிக்கு வேலைக்காரன் சீரியல் கிளிக் ஆகி இப்போது லீட் ரோலில் கலக்கி கொண்டிருக்கிறார். இந்த தருணத்தை பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளிக்கும் போது கண்கலங்கிய படியே சபரி பதிவிட்டிருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: