ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் டிவி சீரியல் நடிகையை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யும் ஏ.ஆர் ரகுமான்!

விஜய் டிவி சீரியல் நடிகையை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யும் ஏ.ஆர் ரகுமான்!

திவ்யா - ஏ.ஆர் ரகுமான்

திவ்யா - ஏ.ஆர் ரகுமான்

நடிகை என்பதை எல்லா தாண்டி அவர் தமிழ் மற்றும் திருக்குறள் மீது கொண்டிருக்கும் ஆர்வம் தான் ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்து இருக்கும் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விஜய் டிவி வேலைக்காரன் சீரியல் நடிகை திவ்யா கிருஷ்ணனை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறார் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான்.

விஜய் டிவி சீரியல்கள் எப்படி மக்கள் மத்தியில் வைரலோ அதே போல் அந்த சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் மக்கள் மத்தியில் பரீட்சையமான முகமாக மாறி விடுகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் முடிவடைந்த வேலைக்காரன் சீரியல் குறித்து கட்டாயம் குறிப்பிட வேண்டும். முத்து படத்தின் சீரியல் வெர்ஷன் என கலாய்க்கப்பட்ட இந்த சீரியலில் . வேலன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சபரியும், வள்ளி என்கிற கதாபாத்திரத்தில் கோமதி ப்ரியாவும், விசாலாட்சி என்கிற கதாபாத்திரத்தில் மலையாள சினிமா நடிகை சோனா நாயர் , ராகவன் என்கிற கதாபாத்திரத்தில் சத்யாவும் நடித்தனர். ஆரம்பத்தில் சீரியல் கதை மெதுவாக சென்றது.

கணவர் சஞ்சீவின் பிறந்த நாள்.. வருத்தப்பட்ட ஆல்யா மானசா!

ஆனால் அதன் பின்பு கதையின் ஒன்லைன் மாறி சீரியல் பயங்கர விறுவிறுப்பாக சென்றது. இதில் வில்லி கனகா ரோலில் சீரியல் நடிகை திவ்யா மிரட்டி இருந்தார். இவரின் நடிப்பு ரசிகர்களை பெருமளவில் ஈர்த்து இருந்தது. சமையல் மந்திரம்' நிகழ்ச்சி மூலமாக ஆங்கராக அறிமுகமான திவ்யா இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸூக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. விதவிதமான கான்செப்ட்களுடன் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் எடுக்கப்படும் அந்த ரீல்ஸ்கள் தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.

உங்க மேல லவ் இல்லை.. சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி!

அதுமட்டுமில்லை தினம் ஒரு திருக்குறள்' என்கிற தலைப்பில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிடுகிறார். குழந்தைங்களுக்கு ஈஸியான வழியில் திருக்குறள் சென்றடையணும் என்கிற நோக்கில் திவ்யா இதை தவறாமல் செய்து வருகிறார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை பார்த்து மறைந்த நடிகர் விவேக் ஒருமுறை திவ்யாவை ஃபோனில் வாழ்த்தி இருக்கிறார். இந்நிலையில் திவ்யாவுக்கு மற்றொரு ஆச்சரியத்தை தந்து இருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான்.
 
View this post on Instagram

 

A post shared by Divya Krishnan (@iamdivyakrishnan)இவர் திவ்யாவின் இன்ஸ்டா பக்கத்தை ஃபேலோ செய்கிறார். இதை திவ்யா மிகப் பெரிய பெருமை, ஆச்சரியம், நன்றியுடன் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார். திவ்யா,  நடிகை என்பதை எல்லா தாண்டி அவர் தமிழ் மற்றும் திருக்குறள் மீது கொண்டிருக்கும் ஆர்வம் தான் ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்து இருக்கும் என ரசிகர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் திவ்யாவுக்கு இந்த இன்ப அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. அதற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றியும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: A.R.Rahman, Television, Vijay tv