Home /News /entertainment /

வருண் - சக்தியை பிரிக்க வரும் வில்லன்.. இனி மெளன ராகத்தில் இவர் ஆட்டம் தான்!

வருண் - சக்தியை பிரிக்க வரும் வில்லன்.. இனி மெளன ராகத்தில் இவர் ஆட்டம் தான்!

மெளன ராகம்

மெளன ராகம்

இனிமேல் சக்தியை நிம்மதியாக வாழ விடமாட்டேன் எனவும் சபதம் போடுகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மெளன ராகம் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ட்ரி கொடுத்து மொத்த குடும்பத்தையும் பயத்தில் நடுங்க வைக்கிறார் விஸ்வநாதன். அமைதியாக செல்லும் சக்தி வாழ்க்கையில் இனி இவர் ஆட்டம் தான்.

    மெளன ராகம் சீரியலில் இப்போது காதம்பரியும் அவரின் அம்மா ருக்மணியும் ஜெயிலில் இருக்கிறார்கள். சக்தியை கொலை செய்ய ரவுடியை ஏற்பாடு செய்து, கடைசியில் அந்த ரவுடி சக்திக்கு பதிலாக கார்த்திக் கிருஷ்ணாவை குத்தி விடுகிறார். இதனால்  ரவுடியை போலீஸ்  வலைவீசி தேடுகிறது. கடைசியில் சென்னைக்கு வந்த சக்தி, அந்த ரவுடியை பார்க்கிறார். அவர் கொடுத்த அடையாளம் மற்றும் வண்டி நம்பரை வைத்து போலீஸூம் ரவுடியை பிடித்து விடுகின்றனர்.

    என்ன ஷபானா இதெல்லாம்? சீரியல் முடிந்த கையோடு ஆளே மாறிப்போன நடிகை!

    கடைசியில் ரவுடி காதம்பரி மற்றும் ருக்மணியை கை காட்டி விடுகிறார். இதனால் போலீஸ் இருவரையும் ஜெயிலில் அடைக்கின்றனர். காதம்பரி கடைசி நேரத்தில் கார்த்திக் கிருஷ்ணாவிடம் கெஞ்சி காலில் விழுகிறார். ஆனால் கார்த்திக் செய்த தவறுக்கு தண்டனை வாங்கி தந்து விடுகிறார். இப்போது மல்லிகா, பழனி, சொர்ணம் எல்லோரும் காதம்பரி வீட்டில் தான் இருக்கிறார்கள். ஸ்ருதியும் தருண் இருப்பதால் அமைதியாக இருக்கிறார். கதை  இப்படி சென்று கொண்டிருக்க இன்னும் வேகத்தை கூட்ட என்ட்ரி கொடுக்கிறார் காதம்பரியின் அப்பா விஸ்வநாதன்.

    இவரின் என்ட்ரி குறித்த புரமோ ஏற்கெனவே வெளியாகி இருந்த நிலையில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியை பார்த்து பேசுகிறார் விஸ்வநாதன். அதன் பின்பு ஜெயிலுக்கு சென்றவர் காதம்பரி மற்றும் ருக்மணியை பார்த்து இன்றே உங்களை ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வருகிறேன் என சத்தியம் செய்கிறார். அதோடு கார்த்திக் கிருஷ்ணாவையும் சென்று பார்க்கிறார்.

    பிரியங்காவின் அளவில்லா மகிழ்ச்சிக்கு காரணம் இதுதானாம்.. அவரே சொல்லிவிட்டார்!

    அப்போது வீட்டில் மல்லிகா இருந்ததும் அவருக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. வழக்கம் போல் விஸ்வநாதனை கண்டு மல்லிகா குடும்பம் அஞ்சி நடுங்குகின்றனர். இனிமேல் சக்தியை நிம்மதியா வாழ விடமாட்டேன் எனவும் சபதம் போடுகிறார். அமைதியாக செல்லும் சக்தியின் வாழ்க்கையில் இனி விஸ்வநாதன் ஏகப்பட்ட பிரச்சனைகளை செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி