Home /News /entertainment /

மீண்டும் சேரும் சத்யா - வருண்... ஷாக்கில் நிற்கும் வில்லி ஸ்ருதி!

மீண்டும் சேரும் சத்யா - வருண்... ஷாக்கில் நிற்கும் வில்லி ஸ்ருதி!

மெளன ராகம் வருண் சத்யா

மெளன ராகம் வருண் சத்யா

மெளன ராகத்தில் சத்யா மீது எந்த தவறும் இல்லை என்ற உண்மை தெரிந்து விட்டது. உடனே சத்யாவை வீட்டுக்கு அழைத்து வர கிளம்புகிறார்.

    மெளன ராகம் சீரியலில் சூப்பரான ட்விஸ்ட் குறித்த புரமோ வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. பிரிந்து இருக்கும் சத்யாவும் வருணும் சேர போகிறார்கள். இந்த ட்விஸ்டை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஸ்ருதி அதிர்ச்சியில் நிற்கிறார்.

    ஆரம்பத்தில் சத்யா மீது ஸ்ருதிக்கு வெறுப்பு இருந்தாலும், தருண் - ஸ்ருதி கல்யாணம் நடக்க அவர் உதவியாக இருந்ததால் ஸ்ருதி, சத்யாவிடம் முடிந்த வரை நன்றாகவே பேசி வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் சத்யா குறித்த அனைத்து உண்மையும் தெரிந்து கொண்ட ஸ்ருதி பழிவாங்கும் வில்லியாக மாறிவிட்டார். இதனால் திரைக்கதையும் சூடுப்பிடித்து வேகமாக பயணித்து வருகிறது. இத்தனை நாள் வரை காதம்பரி தான் சீரியலில் வில்லி, ஆனால் மல்லிகாவின் மகள் சத்யாவுக்கு ஸ்ருதி வில்லி ஆகிவிட்டார். சத்யா வருணை பிரிப்பேன் என சபதமும் போட்டார். அந்த சபதத்தில் ஜெயித்தும் காட்டினார்.

    'ரைட்டர்’ திரைப்படம் உருவானது எப்படி? மனம் திறக்கும் பா .ரஞ்சித் மற்றும் சமுத்திரகனி!

    அதாவது, தருணும் சத்யாவும் காதலித்ததாக வருணிடம் பொய் சொன்னார். இதை நம்பி வருண், சத்யா மீது கோபம் கொண்டு வீட்டை விட்டு அனுப்பி விட்டார். சத்யாவும் போதும் இந்த போராட்ட வாழ்க்கை என்று கையில் பையுடன் வீட்டை விட்டு கிளம்பினார். இப்படி இருக்கையில் தற்போது சத்யா ஊருக்கும் செல்லாமல், போக வழி இல்லாமல் டீஜிபி வீட்டில் அடைக்கலமாக தங்கி இருக்கிறார்.அவரி பேத்தியை மியூசிக் கிளாஸ் அழைத்து சென்ற போது தான் ஸ்ருதி சத்யாவை பார்த்தார்.



    ஆனால் அதை கூட வீட்டில் வேற விதத்தில் சொல்லி வருணை கோபமடைய செய்தார். மனோகர், சத்யாவை வீட்டுக்கு அழைத்து வருகிறேன் என்று சொன்னதையும் ஷீலாவும் சத்யாவும் தடுத்து நிறுத்தி விட்டார்கள். இப்படி இருக்கையில், தற்போது வெளியாகி இருக்கும் புரமோவில் சத்யாவும் வருணும் ஒன்றாக சேர போகிறார்கள். அதாவது, இத்தனை நாட்களாக மனதில் ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு வந்த வருண், தருணிடம் போய் நீ காதலித்த பெண்ணை பற்றி கேட்கிறார்.

    மே 1 அன்று குஷ்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் சர்ப்பிரைஸ்!

    அதற்கு தருண், அது ஒருதலை காதல், அந்த பெண்ணுக்கு நான் காதலித்தது கூட தெரியாது என போட்டு உடைக்க அவ்வளவு தான் வருணுக்கு சத்யா மீது எந்த தவறும் இல்லை என்ற உண்மை தெரிந்து விட்டது. உடனே சத்யாவை வீட்டுக்கு அழைத்து வர கிளம்புகிறார். இதனால் ஒருபக்கம் ஸ்ருதியும் ஷீலாவும் ஷாக்கில் நிற்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி