Home /News /entertainment /

சத்யாவிடம் உண்மையை சொன்ன வருண்.. அடுத்து என்ன செய்ய போகிறார் ஸ்ருதி?

சத்யாவிடம் உண்மையை சொன்ன வருண்.. அடுத்து என்ன செய்ய போகிறார் ஸ்ருதி?

வருண் - சத்யா

வருண் - சத்யா

வருண் - சத்யா திருமண வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனை வெடித்துக் கொண்டிருக்கிறது.

    மெளன ராகம் சீரியலில் சத்யா - வருணை பிரிக்க ஸ்ருதி போட்ட திட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டது. சத்யா மீது கோபத்தில் இருக்கும் வருண், இன்றைய எபிசோடில் ஒரு உண்மையை போட்டு உடைக்கிறார்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் மெளன ராக 2 சீரியல் பரபரப்பான திருப்பத்துடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த தொடருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.முதல் பாகம் அப்பா - மகள் பாசத்தில் வெற்றிக்கண்டது. ஆனால் பார்ட் 2 முழுக்க முழுக்க காதல் கதையாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இளைஞர்கள் இதை விரும்பி பார்க்கின்றனர். சத்யாவை பழி வாங்க இப்போது காதம்பரியின் மகள் ஸ்ருதி வில்லியாகிவிட்டார். ஷீலாவுடன் சேர்ந்து ஸ்ருதி போட்ட திட்டத்தில் இப்போது வருண் - சத்யா திருமண வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனை வெடித்துக் கொண்டிருக்கிறது.

    குக் வித் கோமாளி செஃப் தாமுக்கு இப்படியெல்லாம் நடந்ததா? அவரின் மனைவி சொன்ன உண்மை!

    சத்யா வருணை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் லைஃப் சந்தோஷமாக சென்று கொண்டிருக்க, ஸ்ருதி தருணை மிரட்டி திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வருகிறார். மொத்த குடும்பமும் சத்யாவை கொண்டாடுவது ஸ்ருதிக்கு பிடிக்கவில்லை. அதே போல், கார்த்திக் கிருஷ்ணா சத்யா மீது காட்டும் பாசம் ஸ்ருதிக்கு சந்தேகத்தை வர வைக்கிறது. இப்படி இருக்கையில் சத்யா மல்லிகாவின் மகள் தான் என்பதை ஸ்ருதி கண்டுப்பிடித்து விட்டார். மறுபடியும் சத்யா தனது வாழ்க்கையில் வந்து விட்டதாக கூறி அவரை வீட்டை விட்டு விரட்ட முடிவு எடுக்கிறார்.

    விருது பெறாத காற்றுக்கென்ன வேலி சீரியல் செய்த சாதனை! கொண்டாடும் ரசிகர்கள் கூட்டம்

    மியூசிக் ஸ்கூல் ஒப்பனிங் அன்று, தருணை மிரட்டி அந்த ஸ்கூலை சத்யாவுக்கு தரவிடாமல் செய்தார். சத்யாவுக்கு தாலி பிரித்து கோர்க்கு நிகழ்ச்சி அன்று ஹனிமூன் செல்வதாக பொய் சொல்லிவிட்டு சென்று, மல்லிகாவை வர வைத்தார். கூடிய விரைவில் சத்யாவை வீட்டைவிட்டு அனுப்புவேன் என சபதமும் போடுகிறார். இப்படி இருக்கையில், வருணிடம் போய், சத்யா - தருண் காதலித்ததாக பொய் சொல்லி விடுகிறார். இதை வருணும் நம்பி விடுகிறார். இதனால் சத்யா மீது வெறுப்பையும் கோபத்தையும் காட்டுகிறார். இந்த விஷயம், தருண், சத்யாவுக்கு தெரியாது. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடில் வருண் கோபமாக இருப்பதை தெரிந்து கொண்ட சத்யா, அவரிடம் போய் பேசினார்.

    ஆனால் பதிலுக்கு கோபத்தில் இருந்த வருண், “நீ என்னிடம் மிகப் பெரிய பொய் சொல்லிவிட்டாய், என்னை கஷ்டப்படுத்தியது நீ தான். அது என்னவென்று நீயே கண்டுப்பிடி” என்று சொல்லிவிடுகிறார். வருணை மீண்டும் கோபப்படுத்த ஸ்ருதி, தருணுக்கு டிபன் பாக்ஸ் ரெடி செய்வது, பணிவிடை செய்வது போல் நடித்து நாடகம் ஆட, அதை வழக்கம் போல் தருண் உதாசீனப்படுத்த வருணுக்கு கோபம் வருகிறது. சத்யா மீது இருக்கும் காதலால் தான் ஸ்ருதியிடம், தருண் இப்படி நடந்து கொள்வதாக தவறாக நினைத்து விடுகிறார். சத்யா விஷயத்தில் ஸ்ருதி அடுத்து என்ன செய்ய போகிறார் என தெரியவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி