Home /News /entertainment /

சத்யாவா இப்படி ஒரு காரியத்தை செய்தார்? ஷாக்கில் வருண்!

சத்யாவா இப்படி ஒரு காரியத்தை செய்தார்? ஷாக்கில் வருண்!

மெளன ராகம் வருண்

மெளன ராகம் வருண்

மெளன ராகத்தில் வருணிடம் சண்டை போட்ட சத்யா, கடைசியில் பேக்கை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்ப முடிவு எடுத்துவிட்டார்.

    மெளன ராகம் சீரியலில் ஸ்ருதி சொன்ன ஒரே ஒரு பொய்யால் இன்று வருண் - சத்யா வாழ்க்கை மொத்தமாக முடிந்து விட்டது.

    மெளன ராகம் 2 இப்போது பரபரப்பான கதைக்களத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒருபக்கம் ஸ்ருதிக்கு மல்லிகா - சத்யா பற்றிய மொத்த உண்மையும் தெரிந்து விட்டது. இன்னொரு பக்கம், வருண் ஸ்ருதி சொன்ன பொய்யை நம்பி இப்போது தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துக் கொண்டார். அதாவது, தருணை தனது வழிக்கு கொண்டு வர, சத்யாவின் நிம்மதியை கெடுக்க சபதம் போட்டவர் ஷீலாவுடன் சேர்ந்து சதி வேலை செய்தார். அதன்படி, வருணிடம் தருண் - சத்யா முன்னாள் காதலர்கள் என பொய் சொல்ல அதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார் வருண்.

    விமர்சனங்களை கடந்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை!

    இது உண்மையா? இல்லையா? என ஒருமுறை கூட மனைவி சத்யாவிடம் கேட்காமல் அப்படியே நம்பி சத்யாவை வெறுக்க தொடங்கினார். அதன் விளைவு சத்யாவிடம் பேசாமல், வீட்டில் சாப்பிடாமல் ஏகப்பட்ட பிரச்சனைகள். இதைப்பற்றி தருண், அண்ணன் வருணிடம் கேட்க அவ்வளவு தயக்கம் காட்டுகிறார். நடுவில் புகுந்து ஸ்ருதி கேம் ஆட சத்யா செய்வதறியாமல் கதறி அழுகிறார். இப்படியே எத்தனை நாட்களுக்கு அழுதுகிட்டே இருப்பது என நினைத்த சத்யா ,இன்றைய எபிசோடில் முக்கியமான முடிவு ஒன்றை எடுக்கிறார்.

    அதாவது, வருணிடம் சண்டை போட்ட சத்யா, கடைசியில் பேக்கை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்ப முடிவு எடுத்துவிட்டார். காரணம், இனிமேல் வருணிடம் வாழ முடியாது என்று இல்லை, அவரே உண்மையை தெரிந்துக் கொண்ட பின்பு என்னை வந்து அழைத்து செல்லட்டும் என்கிறார். இதனால் ஷீலாவும் ஸ்ருதியும் அதிர்ச்சி ஆகுகிறார்கள். இனிமேல் யாரை வைத்து கேம் விளையாடுவது என்பது தான் அவர்களின் கவலை.

    ஜெயிக்கிற குதிரை மீது பந்தயம் கட்டுகிறவரா ரஜினி?

    அதுமட்டுமில்லை சத்யா விஷயத்தில் எது நடந்தாலும் வருண் அப்பா மனோகரன் , ஷீலா மீது தான் சந்தேகம் கொள்வார். அதனால் ஷீலாவுக்கும் பயம் வந்து விடுகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என அவர் அஞ்சுகிறார். ஒருபக்கம், சத்யா வீட்டை விட்டு போவார் என சற்றும் எதிர்பார்க்காத வருண் ஷாக்கில் அப்படியே நிற்கிறார். இந்த விஷயம் தருணுக்கு தெரியாது. இதோடு இன்றைய எபிசோடு முடிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி