விஜய் டிவி-யின் புதிய சீரியல் ப்ரோமோவுக்கு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ் ட்விட்டரில் தெரிவித்த பதில் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
விஜய் டிவி விரைவில், ‘தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியலை ஒளிபரப்பவிருக்கிறது. இதில் ’சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ வினோத் பாபு, ’ஈரமான ரோஜாவே’ பவித்ரா ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அமெரிக்கவில் படித்துவிட்டு ஊர் திரும்பும் பவித்ரா, பாரம்பரியத்தை மறக்காமல் இருப்பதாக கோயிலில் பாட்டி ஒருவர் புகழ்கிறார். கல்யாண பொண்ணு பேருக்கு தானே அர்ச்சனை? எனக் கேட்பதிலிருந்து அவருக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருப்பது தெரிகிறது. அந்த நேரத்தில் பெற்றோர்களுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொள்ளும் இருவரை மிரட்டி, இதெல்லாம் தப்பு என்றவாறு, அந்தப் பெண் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்ட செல்கிறார் சீரியலின் ஹீரோ வினோத் பாபு.
தென்றல் வந்து என்னைத் தொடும் - விரைவில்.. #ThendralVanthuEnnaiThodum #VijayTelevision #VijayTv pic.twitter.com/K9UpHTpWwu
— Vijay Television (@vijaytelevision) July 25, 2021
— Dr.Varun Kumar IPS (@VarunKumarIPSTN) July 26, 2021
அப்போது அங்கு வரும் ஹீரோயின் பவித்ரா, ’இது என்ன காட்டு மிராண்டி தனம்.. அம்மன் சாட்சியா கல்யாணம் நடந்திருக்கு. இதை அவிழ்க்க உனக்கு என்ன உரிமை’ என்கிறார். ’ஒரு மஞ்ச கயித்த கட்டுனா, உடனே அதுக்கு பேர் கல்யாணமா?’ என்றவாறு சாமி கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து பவித்ரா கழுத்தில் கட்டிவிட்டு, நெற்றியில் குங்குமமும் வைத்து விட்டு, ‘இப்போ நா உனக்கு தாலி கட்டிட்டேன், பொட்டும் வச்சிட்டேன், நீ என்ன எனக்கு பொண்டாட்டியா? போவியா’ என்றவாறு அங்கிருந்து நகர்கிறார் வினோத்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த மாதிரி நிஜத்துல நடந்தா அவனை ஊர்காரனுங்க எல்லாம் சேர்ந்து அடி வெளுத்திடுவானுங்க பொறுக்கித்தனம் பன்றவனை அந்த பொண்ணு திருத்தி சரி பண்ணுவா ஏன்டா இப்படியெல்லாம் மட்டமா சீரியல் எடுத்து எங்க உயிரை வாங்குறீங்க இப்போ மெட்டி ஒலி ReTelecastingla கூட Daily பாக்குறேன் அது சீரியல்
— Mohamed (@Mohamed54721771) July 25, 2021
You're conveying wrong message to the society. In films and social media creators and ppl are trying hard to change the mindset of the people but you're pulling the society and efforts 10 times down.
— Raj Da (@whitewinerr) July 25, 2021
@tnpoliceoffl please take action against these kind of cringe stuffs.. @vijaytelevision 🤦♂️🤦♂️🤦♂️ I'm blocking Vijay TV from channel list, if this serial telecast.. Stop making stupid promos and serials #VijayTelevision #thendralvanthuennaithodum
— kishore (@kishoree_96) July 25, 2021
இந்த ப்ரோமோ பயங்கர பிற்போக்குத் தனமாக இருப்பதாகவும், திருமணம் ஆகிவிட்டால் தாலியை கழட்ட கூடாது, இப்படித்தான் உடை உடுத்த வேண்டும் போன்ற பிற்போக்கு தனங்கள் சீரியல் மூலமாகத்தான் இன்னும் சமூகத்தை விட்டு அகலாமல் இருப்பதாகவும், இது போன்றவை தான் சமூகத்தை விஷமாக்குவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ், தமிழகத்தில் பெண்களை துன்புறுத்துவதற்கு கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.
பிரிவு 4-ன் படி, கல்வி நிலையங்கள், கோயில் மற்றும் இதர வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம், சாலை, ரயில்வே நிலையம், சினிமா தியேட்டர், பார்க், பீச், திருவிழா நடக்கும் இடங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் பெண்களை துன்புறுத்துவர்கள் மீது, அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குறைந்தது 10,000 ரூபாய் இழப்பீடும் வசூலிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.