• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • பெரிய குடும்பம்.. பணக்கார வீட்டு பையன்! ஆனாலும் தனக்கான அடையாளத்தை பிக் பாஸில் தேடும் வருண்!

பெரிய குடும்பம்.. பணக்கார வீட்டு பையன்! ஆனாலும் தனக்கான அடையாளத்தை பிக் பாஸில் தேடும் வருண்!

பிக் பாஸ் வருண்

பிக் பாஸ் வருண்

தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்திருக்கிறார்

 • Share this:
  விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் 5 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள வருண் கணேஷ் பற்றி பலருக்கும் தெரியாதவை.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்திருக்கும் வருணை பலருக்கும் நடிகராக மட்டுமே தெரியும். இதற்கு முன்பு பப்பி, கோமாளி என பல படங்களில் இவரை பார்த்து இருக்கலாம். நேற்றைய எபிசோடில் அபிஷேக் ஜோசியம் பார்க்கும் போது வருண் பற்றி பேசியதை எல்லோரும் நோட் பண்ணி இருந்தா தெரியும். வருண் வெறும் நடிகர் மட்டுமில்லை அதை தாண்டி அவரை குறித்து தெரிந்து கொள்ள பல தகவல்கள் உள்ளன. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மருமகன் தான் வருண். அதாவது ஐசரி வேலனின் பேரன் ஆவார். பணக்கார குடும்பத்தில் பிறந்த வருண் ரொம்ப ரொம்ப சிம்பிள் பாய். பார்க்கவும் சரி பழகவும் சரி மிகவும் எளிமையான மனிதராம். நண்பர்களுடன் வெளியில் செல்வது, சைக்கிளிங், ட்ரக்கிங் என வழக்கமான இந்த காலத்து பசங்களை போல தான் வளர்ந்து இருக்கிறார்.

  வருணுக்கு சினிமா மேல் ஆசை. அதிலும் படங்களிலும் நடிக்க வேண்டும் என்று கல்லூரி படித்த காலம் முதலே மீடியாவில் ஆர்வமாக இருந்துள்ளார். இதனால் வருண் தனது கெரியரை சாதாரண உதவி இயக்குனராக தான் தொடங்கினார். இயக்குனர் ஏ.ல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் இருந்து பின்பு அவர் இயக்கிய தலைவா படத்திலே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதனைத்தொடர்ந்து பட வாய்ப்புகள் வருணுக்கு குவிய தொடங்கியது. அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார். கோமாளி, வனமகன், பப்பி, ஒருநாள் இரவில் , போகன் ,நெருப்புடா, சம் டைம்ஸ், சீறு என பல படங்களில் நடித்துள்ளார்.

  also read..பிக் பாஸ் அபிஷேக் இவ்ளோ சென்சிட்டிவான ஆளா?

  அதிலும் பப்பி படத்தில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களையும் வாங்கி தந்தது. இந்நிலையில் தனக்கான அடையாளம் மற்றும்  புகழ், பெயரை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் கனவுடன் வருண் பிக் பாஸ் நிகழ்ச்சியை தேர்வு செய்து இருக்கிறார். இதுக்குறித்து தனது நண்பர்களுடனும் வருண் கலந்து பேசினாராம்.
  சிலர் நெகடிவ் விமர்சனங்கள் வந்திட போகுது வேண்டாம் என்றும் அட்வைஸ் செய்தனராம். ஆனால் என்னுடைய கெரியரில் நான் தனியாக தெரிய வேண்டும், வருண் என்றால் யாரு? என்ற இமேஜ் மக்களுக்கு தெரிய வேண்டும் என்று தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்திருக்கிறார். இனி வரும் நாட்களில் வருணின் கேம் கண்டிப்பாக வேற மாதிரி இருக்கும் என்கிறார்கள் அவரின் நெருங்கிய நண்பர்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: