Home /News /entertainment /

பிக் பாஸிலிருந்து வெளியே வந்த வருண் - அக்‌ஷரா வெளியிட்ட முதல் புகைப்படம்!

பிக் பாஸிலிருந்து வெளியே வந்த வருண் - அக்‌ஷரா வெளியிட்ட முதல் புகைப்படம்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

இதற்கு முன்பு வருண், ஐக்கி பெர்ரி ஆஸ்பிட்டலுக்கு சென்று இன்ஸ்டா லைவில் ரசிகர்களுடன் உரையாற்றினார்

    பிக் பாஸ் சீசன் 5ல் இருந்து கடந்த வாரம் வெளியே போன வருண் - அக்‌ஷரா இருவரும் வெளியில் சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் சில வாரங்களுக்கு பிறகு நிகழ்ச்சி சூடுப்பிடித்து தற்போது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு கட்டங்களை கடந்து தற்போது 8 பேர் போட்டியில் உள்ளனர். (பிரியங்கா, நிரூப், தாமரை, அமீர், சஞ்சீவ், சிபி, பாவனி, ராஜூ ஆகியோர் உள்ளனர்). இதில் நேற்று நடைப்பெற்ற டிக்கெட் டு ஃபினாலே சுற்றில் வென்று  அமீர் இறுதி போட்டிக்கு சென்று விட்டார்.

    இதையும் படிங்க.. சன் டிவி சீரியலுக்கு வரும் சூப்பர் ஸ்டார் பட நடிகை!

    மீதமுள்ள 7 பேரில் நாளை ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார். இதுவரை பதிவான வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் சஞ்சீவ் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் விட்டில் இருந்து கடந்த வாரம் ஜோடியாக வெளியேறியவர்கள் வருண் - அக்‌ஷரா. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல் கடந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடக்க, பெஸ்டிஸ் ஆன வருண் - அக்‌ஷரா வெளியெறினார்கள்.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியே போவது யார்? வெளியான தகவல்!

    பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி போட்டியாளர்கள் ஒருவரையொருவர் சந்தித்து பேசுவது எல்லா சீசனிலும் நடக்கும் வழக்கமான நிகழ்வு தான். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களும் சரி, ரசிகர்களும் சரி, பெரிதும் ரசித்த நட்பு. வருண் - அக்‌ஷரா உடையது தான். “எந்தன் நண்பியே நண்பியே” என பிக் பாஸே சாங்க் டெடிகெட் செய்யும் அளவுக்கு குளோஸ் ஃபிரண்ட்ஸாக சுற்றி திரிந்த அக்‌ஷராவும் வருணும் பொது இடத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இந்த புகைப்படம் தற்போது அக்‌ஷரா- வருண் ரசிகர்களால் அதிகம் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வருண், ஐக்கி பெர்ரி ஆஸ்பிட்டலுக்கு சென்று இன்ஸ்டா லைவில் ரசிகர்களுடன் உரையாற்றினார். அந்த வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டானது. சில வாரங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஐக்கி பெர்ரி, மதுமிதா, இசைவாணி, வருண் குடும்பம், அண்ணாச்சி ஃபேமலி என ஒருவரையும் விட்டு வைக்காமல் தொடர்ந்து அவர்களை சந்தித்து பேசி வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி