Home /News /entertainment /

கடின உழைப்பும் விடாமுயற்சியும் தோற்காது: அண்ணன் அருண் விஜய்க்கு வாழ்த்து சொன்ன வனிதா விஜயகுமார்!

கடின உழைப்பும் விடாமுயற்சியும் தோற்காது: அண்ணன் அருண் விஜய்க்கு வாழ்த்து சொன்ன வனிதா விஜயகுமார்!

அருண் விஜய் - வனிதா விஜயகுமார்

அருண் விஜய் - வனிதா விஜயகுமார்

பெற்றோர், உடன் பிறந்தவர்கள் என அனைவரிடமும் இருந்து விலகியிருக்கிறார் வனிதா.

    தனது அண்ணன் அருண் விஜய் நடிப்பில், தங்கையின் கணவர் ஹரி இயக்கியுள்ள யானை படத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். 

    பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் என விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றியவர் நடிகை வனிதா விஜயகுமார். இதில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் முரண்பட்டு, அதிலிருந்து விலகினார். பின்னர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவர், பாதியிலேயே அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மிஸ் பண்ணக் கூடாத விசுவின் சிறந்தப் படங்கள்!

    மறுபுறம் மூன்றாவது கணவர் பீட்டர் பாலை விட்டு பிரிந்த வனிதா, படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். பிரசாந்தின் அந்தகன், பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப், வசந்தபாலனின் புதிய படம் ஆகியப் படங்களை கைவசம் வைத்துள்ளார். அதோடு வனிதா விஜயகுமார் என்ற யூ-ட்யூப் சேனலை நடத்தி வரும் வனிதா, பெண்களுக்கான ஆடை, அலங்காரம், மேக்கப் போன்ற பொருட்களை உள்ளடக்கிய கடையையும் சில மாதங்களுக்கு முன்பு திறந்தார்.




    தவிர, பெற்றோர், உடன் பிறந்தவர்கள் என அனைவரிடமும் இருந்து விலகியிருக்கிறார் வனிதா. இந்நிலையில் தனது அண்ணன் அருண் விஜய்யின் யானை படத்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை வனிதாவின் தங்கை ப்ரீத்தாவின் கணவர் ஹரி இயக்கியிருக்கிறார். அந்த வாழ்த்தில், கடின உழைப்பும் விடாமுயற்சியும் ஒருபோதும் தோல்வியடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Vanitha Vijayakumar

    அடுத்த செய்தி