Vanitha Vijayakumar: ’இப்போ யார் புருஷன்னு கேக்குறாங்க’ வனிதா விஜயகுமார் வருத்தம்

வனிதா விஜயகுமார்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்ததற்கான காரணம் எனது தனிப்பட்ட காரணம்.

  • Share this:
    நெற்றியில் குங்குமம் வைத்தால், இப்போது யார் புருஷன் எனக் கேட்கிறார்கள் என நடிகை வனிதா விஜயகுமார் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

    தான் மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறி, விஜய் டிவி-யின் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து விலகினார் நடிகை வனிதா விஜயகுமார். இதற்கிடையே ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் டைரக்டர் அன்பு சரவணன் இயக்கத்தில் சிவப்பு மனிதர்கள் படத்தின் படப்பிடிப்பில் நடிகை வனிதா விஜயகுமார் கலந்துக் கொண்டார்.

    படப்பிடிப்பின்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த வனிதா விஜயகுமார், “சினிமா துறையை நம்பி பல்லாயிரக்கணக்கானோர் வாழ்ந்துகொண்டு வருகிறார்கள். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த நிலையில் தளர்வுகள் அளித்து சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா நோயை கண்டு பயப்படாமல் இருப்பது மிகவும் நல்லது, சமூக இடைவெளியுடன் வேலை நேரத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.வெகு நாட்களுக்கு பிறகு படப்பிடிப்புகளில் சக நடிகர்களுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்ததற்கான காரணம் எனது தனிப்பட்ட காரணம், வாழ்வை சுயமரியாதையின் அடிப்படையிலே நிகழ்ச்சியில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். சமூக வலைதளத்தில் நிறையத் தவறுகள் நடக்கிறது. தனிப்பட்ட விஷயங்களில் தான் தவறாகப் பேசுகிறார்கள். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு நின்றால், யார் உன் புருஷன் எனக் கேட்கிறார்கள்” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: