நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஹரி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் என விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றியவர் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் முரண்பட்டு, அதிலிருந்து விலகினார்.
மறுபுறம் மூன்றாவது கணவர் பீட்டர் பாலை விட்டு பிரிந்த வனிதா, படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். பிரசாந்தின் அந்தகன், பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப், வசந்தபாலனின்
புதிய படம் ஆகியப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
Dhanush: மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு மகன் யாத்ராவுடன் தனுஷ் - கவனம் பெறும் புகைப்படம்!
அதோடு தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். வனிதாவுக்கு அவரது முதல் கணவர் ஆகாஷ் மூலம் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இரண்டாவது கணவர் மூலம் ஒரு மகள் என மொத்தம் 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.
ET Teaser: சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
இதில் மகன் விஜய் ஸ்ரீஹரி அப்பா ஆகாஷ் பராமரிப்பிலேயே இருக்கிறார். தான் அவரை எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்பது குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார் வனிதா.
சினிமா சம்பந்தமான படிப்பை படித்திருக்கும் ஸ்ரீஹரி, குறும்படம் ஒன்றையும் இயக்கி நடித்திருக்கிறார். அதோடு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.