ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திருமாவளவனை விமர்சித்ததற்காக என்னை மிரட்டுவதா? வனிதா விஜயகுமார் ஆவேசம்

திருமாவளவனை விமர்சித்ததற்காக என்னை மிரட்டுவதா? வனிதா விஜயகுமார் ஆவேசம்

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

எங்கே அரசியல் செய்யணுமோ, அங்க செய்ங்க. நான் தொந்தரவு செய்ய மாட்டேன். நீங்கள் எங்களுடைய எண்டெர்டெயின்மெண்ட் தொழிலை தொந்தரவு செய்வதை நிறுத்துங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விக்ரமன் சார்ந்த கட்சிக்காரர்கள் தனக்கு மிரட்டல் விடுப்பதாக பிக் பாஸ் வனிதா விஜயக்குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தமிழுக்கும் அறிமுகமானது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 100 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் அனைத்து கடினமான தருணங்களையும் கடந்து இறுதிவரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவரே டைட்டில் வின்னராவார்.

தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் பிக் பாஸ் தமிழ் 6-வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில் தற்போது விக்ரமன், அசீம், ஷிவின், மைனா, அமுதவாணன் ஆகிய 5 பேர் மட்டுமே உள்ளனர். இதில் வெற்றி பெறப்போவது விக்ரமனா அல்லது அசீமா என்பது தான் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு.

இதற்கிடையே விக்ரமன் சார்ந்திருக்கும் விசிக கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், பிக் பாஸ் போட்டியில் விக்ரமனை வெற்றி பெறச் செய்வோம் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது ஒருபுறம் ஆதரவையும், மறுபுறம் சர்ச்சையையும் கிளப்பியது.

திருமாவளவனின் ட்வீட்டை கோட் செய்து, “இது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட். மரியாதைக்குரிய அரசியல் தலைவரும், பதவியில் இருக்கும் எம்.பி.யுமான ஒருவர், ரியாலிட்டி ஷோவில் போட்டியிடும் போட்டியாளருக்கு வாக்களிக்க தனது கட்சி உறுப்பினர்களிடம் எப்படி சொல்லலாம்?” என்று கேட்டிருந்தார்.

பின்னர், “தொடர்புடைய யூடியூப் சேனலுக்கு ஃபோன் செய்து மிரட்டியதோடு, என்னை எச்சரிக்க முயல்கின்றனர். யாருக்கும் எதுக்கும் பயந்தவ நான் இல்லை… உங்க அரசியல் புத்தி என்னனு காலம் காலமா பாத்திருக்கோம். நேர்மையா மக்களுக்கு நல்லது பண்ணி முன்னேற பாருங்கம், உங்க அரசியல் எல்லாம் எங்கிட்ட வச்சிக்காதீங்க.

பிக் பாஸ் தமிழ் 6 டைட்டிலை வெல்லப்போவது விக்ரமனா அசீமா? அனல் பறக்கும் இணைய விவாதம்!

ஒரு பிக் பாஸ்-ல ஜெயிக்குறதுக்கே இவ்ளோ அராஜகம்ன்னா, தேர்தல் வரும்போது என்னலாம் செய்வாங்க இவங்க மாதிரி அரசியல் கட்சிகள். எங்கே அரசியல் செய்யணுமோ, அங்க செய்ங்க. நான் தொந்தரவு செய்ய மாட்டேன். நீங்கள் எங்களுடைய எண்டெர்டெயின்மெண்ட் தொழிலை தொந்தரவு செய்வதை நிறுத்துங்கள்” என விசிக-வினர் தனக்கு மிரட்டல் விடுக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil 6, Vanitha Vijayakumar