வனிதா - ரம்யாகிருஷ்ணன் மோதல் வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி

ரம்யா கிருஷ்ணன் - வனிதா விஜயகுமார்

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் போது வனிதா விஜயகுமார், ரம்யாகிருஷ்ணன் இருவருக்கும் இடையே நடைபெற்ற மோதல் வீடியோ புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

 • Share this:
  பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் என விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இதில் தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

  இதற்கிடையே தான் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து தான் விலகுவதாக சில தினங்களுக்கு முன்னர் வனிதா விஜயகுமார் அறிவித்தார். "பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் எனது காளி அவதாரத்துக்குப் பாராட்டுகளும், ஆதரவும் தந்த ஊடகங்கள், என் ரசிகர்கள் மற்றும் என் நல விரும்பிகளுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

  பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு நான் வெளிநடப்பு செய்யும் முன், நான் உருவாக்கிய தாக்கத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஒருவர் கொடுமைப்படுத்துவதை, துன்புறுத்துவதை நான் என்றும் ஏற்க மாட்டேன். அது யாராக இருந்தாலும், என் குடும்பத்தினராக இருந்தாலும் சரி. இது இந்த உலகுக்கே தெரியும் என்று தெரிவித்திருந்தார்.

  Also Read : படுகிளாமர் லுக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்ட போட்டோஸ்

  மேலும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் மோசமான நபரால் நான் துன்புறுத்தப்பட்டேன், அவமானப்படுத்தப்பட்டேன், மோசமாக நடத்தப்பட்டேன். அவரது திமிர் காரணமாக அவரால் எனது தொழில் வளர்ச்சியை ஏற்க முடியவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று தெரிவித்திருந்தார்.

  வனிதா குறிப்பிட்ட அந்த சீனியர் நடிகை ரம்யா கிருஷ்ணன் என நெட்டிசன்கள் தெரிவித்து வந்து வந்தனர். இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரம்யா கிருஷ்ணன், ‘பிக்பாஸ் ஜோடி படப்பிடிப்பின் போது என்ன நடந்தது என்பது வனிதாவை கேட்டுக் கொள்ளுங்கள்’ என்றும், ’என்னை பொருத்தவரைக்கும் இது ஒரு பிரச்சனையே இல்லை’ என்றும், ’இந்த விஷயம் தொடர்பாக என்னுடைய கருத்து என்னவென்றால் ’நோ கமெண்ட்ஸ்’ என்றும் தெரிவித்திருந்தார்.

  Also Read : பாரதியை டிஎன்ஏ எடுக்கச் சொல்லும் செளந்தர்யா - விறுவிறுப்பான கட்டத்தில் பாரதி கண்ணம்மா!

  இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டவர்கள் தங்களது நடனத்திறமையை வெளிப்படுத்துகிறார்கள். வனிதா காளி கெட்டப்பில் வருகிறார். மேலும் மற்ற போட்டியாளர்களுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று வனிதா கூறுகிறார். இதை கேட்டு ரம்யாகிருஷ்ணன் கோபத்தில் மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும் என்று கத்துகிறார். இதையடுத்து வனிதா செட்டில் இருந்து கிளம்புகிறார்.  ஐயோ இனி என்ன எல்லாம் நடக்க போகிறதோ என்ன பின்னணியில் கூறுவது உடன் புரோமோ முடிவடைகிறது. இந்த எபிசோட் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது. அப்போது தான் வனிதா விஜயகுமார் - ரம்யாகிருஷ்ணன் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் முற்றிலுமாக தெரிய வரும். இந்த புரோமோ இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: