விஜய் டிவி-யுடன் ஏற்பட்ட முரண்... முன்னணி சேனலில் வனிதா விஜயகுமார்!

வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் போது, நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட முரண்பாட்டால், அதிலிருந்து வெளியேறினார் வனிதா.

 • Share this:
  நடிகை வனிதா விஜயகுமார் வேறொரு சேனலின் நகைச்சுவை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார்.

  பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் என விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றியவர் நடிகை வனிதா விஜயகுமார். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் போது, நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட முரண்பாட்டால், அதிலிருந்து வெளியேறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  இந்நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், கன்னி தீவு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ளவுள்ளார். இதன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட வனிதா, இன்ஸ்டாகிராமில் அந்த படங்களைப் பகிர்ந்து, விரைவில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். கன்னி தீவு நிகழ்ச்சியில், ரோபோ சங்கர், ஷகிலா, ஜாங்கிரி மதுமிதா முக்கிய அங்கம் வகித்து வருகின்றனர்.

  தவிர, தற்போது பிரசாந்தின் அந்தகன், பிக்கப் ட்ராப், வசந்தபாலனின் புதிய படம் என படு பிஸியாக இருக்கிறார் வனிதா விஜயகுமார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: