பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளார் நடிகையும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயக்குமார். அது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
'பிக் பாஸ் அல்டிமேட்' தமிழ் ரியாலிட்டி ஷோ நேற்று மாலை பிரமாண்டமாக தொடங்கியது. இதில் சுரேஷ் சக்ரவர்த்தி, அபினய், நிருப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, சுருதி, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி ஆகியோர்
போட்டியாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.
'பிக் பாஸ் அல்டிமேட்' என்பது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT பிளாட்ஃபார்மில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்பதால், இதை ரசிகர்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். முதல் நாளிலேயே இந்நிகழ்ச்சி சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. வெளியான ப்ரோமோவில் முதல் எலிமினேஷனுக்கான நாமினேஷனில் பெரும்பான்மையானவர்கள் வனிதா விஜயகுமாரை குறிவைப்பதாகத் தெரிகிறது.
அதோடு மற்றுமொரு ப்ரோமோவில், ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்குள் சுவாரஸ்யமான கேள்விகளை கேட்டுக் கொள்ளும் வகையில்
டாஸ்க் தரப்படுகிறது. அதற்கு ஆமான்னா குடி, இல்லன்னா கடி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அப்போது ஒருவரைப்பற்றி புரளி பேசி அவரிடமே மாட்டிக் கொண்டதில்லை’ என சினேகன் கேட்க, உடனே எழுந்த வனிதா, ’பிக் பாஸ் இதுக்கான பதில் உங்களுக்கும் தெரியும், உலகத்துக்கும் தெரியும். இது சரியா தப்பான்னு மக்கள் முடிவு பண்ணனும், நீங்க யாரு அதுக்கு? நான் டாஸ்க்ல இருந்தே வெளில வர்றேன்’ என்றவாறு அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்.
ஒவ்வொரு சீசனிலும் கலவரத்திற்கு காரணமானவர்கள் ஒரே இடத்தில் இருப்பதால், பிக் பாஸ் அல்டிமேட் எப்போதும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.