நடிகை வனிதா விஜயகுமார் புத்த மதத்திற்கு மாறியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் என விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றியவர் நடிகை வனிதா விஜயகுமார். இதில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் முரண்பட்டு, அதிலிருந்து விலகினார். பின்னர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவர், பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
மறுபுறம் மூன்றாவது கணவர் பீட்டர் பாலை விட்டு பிரிந்த வனிதா, படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். பிரசாந்தின் அந்தகன், பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப், வசந்தபாலனின் புதிய படம் ஆகியப் படங்களை கைவசம் வைத்துள்ளார். அதோடு வனிதா விஜயகுமார் என்ற யூ-ட்யூப் சேனலை நடத்தி வரும் வனிதா, பெண்களுக்கான ஆடை, அலங்காரம், மேக்கப் போன்ற பொருட்களை உள்ளடக்கிய கடையையும் சில மாதங்களுக்கு முன்பு திறந்தார்.
Sivakarthikeyan: 4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு
இந்நிலையில் தற்போது அவர் புத்த மதத்திற்கு மாறிய விஷயத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தாய்லாந்திலுள்ள புத்தர் கோயிலுக்கு செல்லும் படங்களைப் பகிர்ந்த வனிதா, “நான் பல வருடங்களுக்கு முன்பு மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கைக்காக புத்த மதத்தை தேர்ந்தெடுத்தேன். அதிலிருந்து எதையும் திரும்பி பார்ப்பதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.