’என் பொக்கிஷம்... கடவுள் அனுப்பிய தேவதை’ வனிதா விஜயகுமார் உருக்கம்!

வனிதா விஜயகுமார்

ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் விலகினார்.

  • Share this:
    நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவின் 16-வது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியிருக்கிறார்.

    நடிகர் விஜய்யுடன் ‘சந்திரலேகா’ என்ற படத்தில் நடித்து, தனது நடிப்புப் பயணத்தை தொடங்கியவர் நடிகை வனிதா விஜயகுமார். அதன் பிறகு சில படங்களில் நடித்த அவர், திருமணம் ஆனதால் நடிப்புக்கு இடைவெளி விட்டார். நடிகர் ஆகாஷை திருமணம் செய்துக் கொண்ட வனிதாவுக்கு, அதன் மூலம் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதையடுத்து ஆகாஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரிடமிருந்து பிரிந்தார்.

    இதைத் தொடர்ந்து தொழிலதிபர் ஆனந்த் ஜெயராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக பிரிந்தனர். இதைத் தொடர்ந்து கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு, தனது அதிரடி கருத்துகளால் பிரபலமானார். கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்த வனிதா, சில மாதங்களிலேயே அவரை விட்டு பிரிந்தார்.




    தவிர குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் என விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றினார். ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் விலகினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தற்போது வனிதா அவரது மூத்த மகள் ஜோவிகாவின் 16-வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். அதன் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வனிதா, “என் ஜோவிகா... எனது மதிப்புமிக்க சொத்து... என் பொக்கிஷம்.. கடவுள் அனுப்பிய தேவதை. என் எல்லாமும் ஆனவள். இன்று 16-வது பிறந்தநாளை ’பிக்கப்’ செட்டில், நண்பர்கள் மற்றும் யூனிட்டுடன் கொண்டாடினார்” எனத் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: