Vanitha Vijayakumar: ’இடியட்களின் உளறல்களை கண்டுகொள்ள நேரமில்லை’ - நகுலுக்கு வனிதா விஜயகுமார் பதில்

வனிதா விஜயகுமார்

செட்டில் என்ன நடந்தது என்பதற்கும், அதன் பின் ஜட்ஜுகளை வைத்து மீண்டும் ஷூட் செய்து எடிட் செய்து வெளியிட்டதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

  • Share this:
    பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்னைக்கு ரம்யா கிருஷ்ணனிடம், வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறிய நகுலுக்கு தற்போது அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

    பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் என விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றியவர் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, தான் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ”பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு நான் வெளிநடப்பு செய்யும் முன், நான் உருவாக்கிய தாக்கத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஒருவர் கொடுமைப்படுத்துவதை, துன்புறுத்துவதை நான் என்றும் ஏற்க மாட்டேன். அது யாராக இருந்தாலும், என் குடும்பத்தினராக இருந்தாலும் சரி. இது இந்த உலகுக்கே தெரியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்தே விஜய் டிவி எனது குடும்பமாகிவிட்டது. குக்கு வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, மேலும் அவர்களது பல நிகழ்ச்சிகளில் சிறப்பு பங்கேற்பு என அவர்களோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.



    எங்களுக்குள் பரஸ்பர மரியாதை உண்டு. அது எப்போதுமே நீடிக்கும். ஆனால் பணிசெய்யும் இடத்தில் தொழில்முறை அல்லாது, நெறிமுறையற்ற நடத்தையை ஏற்கவே முடியாது. ஒரு மோசமான நபரால் நான் துன்புறுத்தப்பட்டேன், அவமானப்படுத்தப்பட்டேன், மோசமாக நடத்தப்பட்டேன். அவரது திமிர் காரணமாக அவரால் எனது தொழில் வளர்ச்சியை ஏற்க முடியவில்லை என்பதே இதற்குக் காரணம்” என அதற்கான காரணத்தையும் தெரிவித்தார்.

    இந்நிலையில் காளி வேடத்தில் இருந்த வனிதா தங்களை தரக்குறைவாகப் பேசியதாக குற்றம் சாட்டினார் நிகழ்ச்சியின் நடுவரான நகுல். என்னை விடுங்க ரம்யா கிருஷ்ணன் எவ்வளவு பெரிய நடிகை. அவருடைய அனுபவம் என்ன? அவரை அப்படி பேசலாமா? அவரிடம் வனிதா மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    இதற்கு தற்போது பதிலளித்திருக்கும் வனிதா, “நான் என் வாழ்க்கையை பிஸியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்த வேலையில்லாத இடியட்களின் உளறல்களை கண்டுகொள்ள எனக்கு நேரம் இல்லை. செட்டில் என்ன நடந்தது என்பதற்கும், அதன் பின் ஜட்ஜுகளை வைத்து மீண்டும் ஷூட் செய்து எடிட் செய்து வெளியிட்டதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எனக்கு அளிக்கப்பட்ட மார்க்கை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் ஷோவில் தொடர வேண்டாம் என நான் முடிவு செய்தேன். எனக்கு ஒருவருடன் பிரச்சனை வருகிறது என்றால், எங்களுக்கு நடுவில் ஏற்கனவே பிரச்சனை இருந்தது என்று அர்த்தம். அது எங்களுக்கு நடுவில் தான். நாங்கள் இருவரும் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது, மற்றவர்களும் அதை பற்றி பேசாமல், விமர்சிக்காமல் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: