Home /News /entertainment /

இனி தான் சம்பவமே இருக்கு.. பிக் பாஸ் அல்டிமேட்டில் வனிதா விஜயகுமார் என்ட்ரி!

இனி தான் சம்பவமே இருக்கு.. பிக் பாஸ் அல்டிமேட்டில் வனிதா விஜயகுமார் என்ட்ரி!

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

பிக்பாஸ் அல்ட்டிமேட் என்ற பெயரில் 24x7 லைவ் ஸ்ட்ரீமிங்கில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஜனவரி 30 முதல் ஒளிபரப்பாக உள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
  சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்கள் கலக்கலாக ஒளிபரப்பாகி வந்தாலும் ஸ்டார் விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவை மிஞ்ச இதுவரை வேறு எதுவும் வரவில்லை. சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக நிறைவு பெற்றது. கடந்த அக்டோபர் 3-ம் தேதி இசை வாணி, ராஜு, மதுமிதா, பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, மலேசிய தமிழ் பெண் நாடியா சாங், விஜய் டிவி-யின் பிரபல ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் - சாவித்திரி ஆகியோரது பேரன் அபிநய், அக்‌ஷரா, ஐசரி வருண், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, ஸ்ருதி, பாவனி ரெட்டி, நிரூப், ஐக்கி, சிபி, சின்னப்பொண்ணு உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக துவங்கியது பிக்பாஸ் சீசன் 5.

  கோரியோகிராஃபர் அமீர், நடிகர் விஜயின் நெருங்கிய நண்பரும் பிரபல சீரியல் நடிகருமான சஞ்சீவ் உள்ளிட்டோர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். இறுதியாக சீரியல் நடிகர் ராஜு வெற்றி பெற்றார். இந்நிலையில் ரசிகர்களை பிக்பாஸ் ஜுரத்திலேயே வைத்திருக்க முடிவு செய்து இந்த பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவை OTT ஃபார்மெட்டில் துவக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது

  இதையும் படிங்க.. சின்னத்திரை மீரா ஜாஸ்மின்.. யாரடி நீ மோகினி புகழ் நக்ஷத்ரா சொன்ன விஷயம்!

  பிக்பாஸ் அல்ட்டிமேட் (Bigg boss ultimate) என்ற பெயரில் 24x7 லைவ் ஸ்ட்ரீமிங்கில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஜனவரி 30 முதல் ஒளிபரப்பாக உள்ளது. சின்னத்திரையில் பிக்பாஸ் ஷோவை தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் பிக்பாஸ் அல்ட்டிமேட்டையும் தொகுத்து வழங்க போகிறார். இந்த புதிய பிக்பாஸ் ஷோ வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜனவரி 30 பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுடன் தொடங்க உள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ப்ரோமோ வீடியோ மூலம் பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் மூன்றாவது போட்டியாளராக வனிதா விஜயகுமார் வீட்டிற்குள் நுழைய உள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் குஷி அடைந்து உள்ளனர். ஏற்கனவே சினேகன் மற்றும் ஜூலி ஆகிய இரு முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் புதிய ஷோவில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் மூன்றாவது போட்டியாளராக வனிதா உள்நுழைவது உறுதியாகி இருக்கிறது.




  தற்போதைய லேட்டஸ்ட் புரமாவில் குடுகுடுப்பைகாரர் ஒருவர் வீட்டுக்கு வர போற மகராசி யாரு என்று சொல்லு ஜக்கம்மா என்று குடுகுடுப்பையை ஆட்டுகிறார். மக்கள் எதிர்பார்த்த மகராசி பிக்பாஸ் வீட்டுக்கு வர போகிறாள் என்று ஜக்கம்மா சொல்றா என்று கூறி கோபம் இருக்கிற இடத்துல தான் குணம் இருக்கும். இவங்க கிட்ட ரொம்ப கோவம் இருக்கும் என்று சொல்ல, பாத்திரம் ஒன்று பறந்து வந்து விழுகிறது. நல்ல குணமும் இருக்கும், இவங்கள கூப்பிட்டா பிக்பாஸுக்கே லைட்டா ஜர்க் ஆகும் என்று போட்டியாளரின் புகழ் பாட முடிந்தது. இதிலேயே வனிதா தான் அந்த போட்டியாளர் என்று பலருக்கும் தெரிந்து விட்டது.

  பின் படையப்பா நீலாம்பரி போல முந்தைய பிக்பாஸில் தான் வெளியேற கூறி கமல் காட்டிய கார்டு வீடியோ கிளிப்பிங்கை போட்டு போட்டு பார்க்கும் வனிதாவை, திரும்ப திரும்ப பாத்தது போதும் வனிதா பிக்பாஸ் அல்ட்டிமேட்டுக்கு திரும்ப வாங்க என்று பிக்பாஸ் அழைக்கிறார். பின் மின்னல் வேகத்தில் புறப்படும் வனிதா திரும்ப வந்துட்டேனு சொல்லு, சம்பவம் இனிமே தான் ஆரம்பம் என்று கூறுவதோடு அந்த புரமோ முடிகிறது.



  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Vanitha Vijayakumar, Vijay tv

  அடுத்த செய்தி