நியூ ஹேர்ஸ்டைலில் வனிதா விஜயக்குமார் - நண்பர்களுடன் பார்ட்டி!

வனிதா விஜயகுமார்

பார்ட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள், நடிகைகளுடன் புகைப்படங்களையும் எடுத்து பதிவிட்டுள்ளார்

  • Share this:
    நெருங்கிய தோழியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயக்குமார், நியூ ஹேர்ஸ்டைல், காஸ்டியூம் என கலக்குகிறார்.

    திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜயக்குமாரின் மகளான வனிதா விஜயக்குமார், வெள்ளித்திரையில் படு பிஸியாகிவிட்டார். கடந்த சில வருடங்களாக சர்ச்சைகள், குடும்ப பிரச்சனைகள் என வெள்ளிதிரையில் முகம் காட்டாமல் இருந்தார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 சீசன் மூலம் சின்னத்திரையில் நுழைந்த அவர், அதன் மூலம் லைம் லைட்டில் இடம்பிடித்தார். காரசாரமான போட்டியாளராக இருந்த வனிதா, பிக்பாஸூக்குப் பின் ‘குக் வித் கோமாளி’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமையலில் கை தேர்ந்தவரான அவர், போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றியும் பெற்றார்.

    பின்னர், கலக்கப் போவது யாரு ஷோவில் நடுவராக கலந்து கொண்டார். அதன்பின், பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுரேஷ் சக்கரவர்த்தியுடன் இணைந்து ஆடிய அவர், நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதலால் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி அதிரடி காட்டினார். ஷோவில் இருந்து வெளியேறியது குறித்து விளக்கம் அளித்த வனிதா, நிகழ்ச்சி தொடங்குதற்கு முன்பு கூறியதுபோல் நிகழ்ச்சி நடக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார். தற்போது இயக்குநர் வசந்தபாலன் உள்ளிட்டோரின் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் வருவதால் மகிழ்ச்சியில் இருக்கும் வனிதா, தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டிகள் குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அப்டேட்டாக பதிவிட்டு வருகிறார். அண்மையில், தன் நெருங்கிய தோழி ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதில், நியூ ஹேர் ஸ்டைல், புது காஸ்ட்டியூம் என கலக்குகிறார்.










    மேலும், பார்ட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள், நடிகைகளுடன் புகைப்படங்களையும் எடுத்து பதிவிட்டுள்ளார். வனிதா கலந்து கொண்ட பார்ட்டியில் பிக்பாஸ் புகழ் ரேஷ்மா, ஆர்த்தி, சோனியா அகர்வால் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில், #Friendship_goals என்ற ஹேஸ்டாக்கின் கீழ் செலிபிரிட்டிகளுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 என்ற காமெடி ஷோவிலும், இந்த வாரம் சிறப்பு விருந்தினராக வனிதா பங்கேற்க உள்ளார்.

    ரோபோ சங்கர், சகிலா, மதுமிதா ஆகியோர் நடுவர்களாக இருக்கும் இந்த ஷோவில் வாரம்தோறும் ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுகின்றனர். ஏற்கனவே, நமீதா, ஜனனி ஐயர் உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நிலையில், அவர்களின் வரிசையில் வனிதா கலந்து கொள்ள இருக்கிறார். விஜய் டிவியில் இருந்த ரியாலிட்டி ஷோ காமெடி நடிகர்களான அமுதவானன் உள்ளிட்டோர் காமெடி மற்றும் கலாட்டாவில் வெளுத்து வாங்குகின்றனர். இதனால், இந்த ஷோ நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: