Home /News /entertainment /

உன் கணவன் என்னைப் பற்றி பேசியது தவறு – சுஜாவுடன் வனிதா வாக்குவாதம்

உன் கணவன் என்னைப் பற்றி பேசியது தவறு – சுஜாவுடன் வனிதா வாக்குவாதம்

bigg boss ultimate

bigg boss ultimate

Bigg Boss Ultimate Tamil | வனிதா விஜயகுமார் மீது ஏகப்பட்ட விஷயங்களுக்காக ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும் அவரை யாருமே இதுவரை கேரக்டர் அசாசினேஷன் செய்தது இல்லை. அது மட்டுமின்றி, தன்னுடைய உறவு சிக்கல்கள் பற்றி மிகவும் வெளிப்படையாகவே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் 3 வருடங்களுக்கு முன் சுஜா வருணியின் கணவர் சிவகுமார் செய்திருந்த அந்த ட்வீட் அனைவருக்குமே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும் ...
பிக்பாஸ் அல்டிமேட்டில் சீசன் 1ல் இருந்து சினேகன், சுஜா, மற்றும் ஜூலி, சீசன் 2ல் இருந்து ஷாரிக் மற்றும் தாடி பாலாஜி, சீசன் 3ல் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமார், சீசன் 4ல் இருந்து பாலாஜி முருகதாஸ், அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்தி மற்றும் இறுதியாக சமீபத்தில் முடிந்த சீசன் 5 ல் இருந்து நான்கு போட்டியாளர்கள் தாமரை, நிரூப், சுருதி மற்றும் அபிநை ஆகியோர் போட்டியாளராகக் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட்டில் விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சமே இல்லாத பல நிகழ்வுகள் நடந்து வருகின்றது. 24 மணி நேரமும் யார் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பார்கள் என்ற கேள்விக்கு விடையாக, பலரும் நாள் முழுவதும் நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி முதல் டாஸ்க்கே பட்டையைக் கிளப்பியது. இதற்கிடையில் சுஜா வருணியுடன் வனிதா விஜயக்குமாருக்கு ஒரு காரசாரமான விவாதமும் நடை பெற்றது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் வனிதா விஜயகுமார். ஆனால் அவரின் போக்கு பிடிக்காமல் மூன்றாவது வாரத்திலேயே மக்களால் வெளியேற்றப்பட்டார். வனிதா விஜயகுமார் வெளியேறிய பின்னர் அவர் மீண்டும் போட்டியாளராக உள்ளே நுழைந்தார். வைல்ட் கார்டு எண்ட்ரியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் மீண்டும் வருவது இதுவே முதல் முறை. வத்திக்குச்சி வனிதா என்ற பெயரும் அவருக்கு வழங்கப்பட்டது. அதற்கு காரணம் ஏதாவது ஒரு பிரச்சனையை அவ்வபோது கிளப்பி விட்டு அதைப் பெரிதாக்கி வேடிக்கைப் பார்ப்பது தான்.தர்ஷன் மற்றும் ஷெரின் இருவரும் நெருக்கமாக பழகி கொண்டிருந்த நிலையில், தர்ஷனுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்பதை பற்றி அறிந்திருந்த வனிதா விஜய்குமார் ஷெரின் மற்றும் தர்ஷனின் உறவைப் பற்றி ஒரு புதிய பிரச்சினையைக் கிளப்பினார்.

Also Read : பிக் பாஸ் தாமரைக்கு இத்தனை உதவிகளை செய்தாரா வருண்?

தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டிருக்கும் சுஜா வருணியின் கணவர் சிவகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி ரிவியூ செய்வது வழக்கம். டிவிட்டரில் தனது கருத்துகளை பகிர்வது வழக்கம். பிக் பாசில் மீண்டும் ரீ-என்ட்ரி ஆன போது, வனிதா விஜயகுமார் மீது ஏகப்பட்ட அதிருப்தி விமர்சனங்கள் இருந்து வந்தது. அதில், சுஜாவின் கணவர் செய்த ட்வீட் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியது. தர்ஷன் மீது வனிதாவுக்கு ஈடுபாடு, அதனால் தான் தர்ஷனிடம் இருந்து ஷெரினைப் பிரிக்கப் பார்த்தார் என்ற அதிர்ச்சியூட்டும் டிவீட்டை செய்திருந்தார்.

Also Read : மாளவிகா மோகனன் கவர்ச்சி படம்... படுமோசமாக போட்டாஷாப் செய்து பரப்புவதாக புகார்..

வனிதா விஜயகுமார் மீது ஏகப்பட்ட விஷயங்களுக்காக ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும் அவரை யாருமே இதுவரை கேரக்டர் அசாசினேஷன் செய்தது இல்லை. அது மட்டுமின்றி, தன்னுடைய உறவு சிக்கல்கள் பற்றி மிகவும் வெளிப்படையாகவே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் 3 வருடங்களுக்கு முன் சுஜா வருணியின் கணவர் சிவகுமார் செய்திருந்த அந்த ட்வீட் அனைவருக்குமே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது . பிறகு அந்த டீவீட்டை அவர் டெலீட் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஒரு தம்பியிடம் நான் எப்படி தவறாக நடந்து கொள்வேன், எப்படி அந்த கண்ணோட்டத்தில் பார்ப்பேன், அவனுடைய அக்கா நான்’ என்று மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சிவகுமார் எழுப்பிய பிரச்சனையைப் பற்றி சுஜாவிடம் விவரித்துக் கொண்டிருந்தார். அதற்கு சுஜா வருணி தனக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது என்றும் அவரிடம் கேட்கிறேன் என்று வனிதாவிற்கு பதில் அளித்துள்ளார்.சுஜா வருணி, வனிதா விஜயகுமார் இருவருமே மிகவும் கடுமையான போட்டியாளராக தான் அறியப்பட்டுள்ளனர்.ஆனால் தற்பொழுது சுஜா ஏன் அமைதி காக்கிறார் என்பதும் தெரியவில்லை. நேற்று அவருடைய கணவர் வனிதாவை பற்றி தவறாக பேசியதும் பிரச்சனையை பற்றி கூறியதும், அதனால் சுஜா மீதும் கூட கோபமாக இருப்பதாக வனிதா தெரிவித்ததற்கும் கூட சுஜா அமைதியாக இருந்து வனிதாவை சமாதானம் செய்தார்.
Published by:Selvi M
First published:

Tags: Actor Sivakumar, Bigg Boss Tamil, Suja varunee, Vanitha Vijayakumar

அடுத்த செய்தி