• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vanitha Vijayakumar: ’முதலில் அதை நிறுத்து...’ யாஷிகா ஆனந்திற்கு வனிதா விஜயகுமார் அட்வைஸ்

Vanitha Vijayakumar: ’முதலில் அதை நிறுத்து...’ யாஷிகா ஆனந்திற்கு வனிதா விஜயகுமார் அட்வைஸ்

வனிதா விஜயகுமார் - யாஷிகா ஆனந்த்

வனிதா விஜயகுமார் - யாஷிகா ஆனந்த்

பிறப்பும் இறப்பும் முன்பே முடிவு செய்யப்பட்டது. அதை எவராலும் மாற்ற முடியாது.

  • Share this:
    விபத்து குறித்து பதிவிட்ட யாஷிகா ஆனந்திற்கு நடிகை வனிதா விஜயகுமார் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் இன்னும் பிரபலமானார். இதற்கிடையே கடந்த வாரம் புதுச்சேரியில் நடந்த ஒரு விருந்தில் கலந்துக் கொண்ட பின், சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த யாஷிகா, சூளேரிக்காடு அருகே வரும்போது அவரது கார் விபத்துக்குள்ளாது. இதில் சீட் பெல்ட் அணியாத யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி, காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தோழியின் மரணம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த யாஷிகா, ”நான் இப்போது என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை விவரிக்க முடியவில்லை. நான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

    vanitha vijayakumar, yashika anand, yashika anand accident, yashika anand health update, yashika anand health update today, வனிதா விஜயகுமார், யாஷிகா ஆனந்த், யாஷிகா ஆனந்த் விபத்து
    வனிதா விஜயகுமார் அறிவுரை


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் யாஷிகாவுக்கு அறிவுரை கூறியுள்ளார் வனிதா. “டார்லிங் யாருக்கு வேண்டுமானாலும் இது நடந்து இருக்கலாம். அதனால் தான் அதனை விபத்து என்கிறோம். பிறப்பும் இறப்பும் முன்பே முடிவு செய்யப்பட்டது. அதை எவராலும் மாற்ற முடியாது. உன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயத்திற்காக உன்னை நீயே குற்றம்சொல்வதை முதலில் நிறுத்து.

    மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாதே. நீ தெளிவாக இருக்க வேண்டும். நன்றாக ஓய்வெடு, உடல்நலனை பார்த்துக்கொள். இந்த விபத்தில் இருந்து நீ பிழைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கும். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: