சமீபத்தில் ஜீ தமிழில் தொடங்கப்பட்ட மாரி சீரியலில் நடிகை வனிதா விஜயகுமார் இருப்பதை பார்த்து ஷாக் ஆகியுள்ளனர் ரசிகர்கள். ஏன் தெரியுமா?
வெள்ளித்திரை, சின்னத்திரை, ரியாலிட்டி ஷோ, யூடியூப் என எந்த பக்கம் திரும்பினாலும் வனிதாவின் முகத்தை பார்க்க முடிகிறது. ஃபர்ஸ்ட் இன்னிங்ஸை விட வனிதாவின் ரீ என்ட்ரிக்கு பிறகு அவரின் இரண்டாவது இன்னிங்க்ஸ் மிகப் பெரிய அளவில் கை கொடுத்துள்ளது. என்ன தான் சர்ச்சையில் சிக்கினாலும் தனது கெரியரில் ஸ்ட்ராங்காக இருக்கிறார்
வனிதா. ஒருபக்கம் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இப்போது அந்த சேனலில் வனிதாவின் மூத்த மகளும் வீடியோ போட தொடங்கி விட்டார்.
எதிர் நீச்சல் சீரியலில் அந்த நடிகை விலகவில்லை.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
இன்னொரு பக்கம் வனிதா வெள்ளித்திரையில் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சமீபத்தில் கூட வனிதா ’வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக நடிக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது. இது தவிர சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் அவ்வப்போது தலை காட்டுகிறார். இப்போது சீரியல்களிலும் நடிக்க தொடங்கி விட்டார். அதாவது, ரோஜா, புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்தவர் இப்போது மற்றொரு சீரியலிலும் நடித்து வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 6 க்கு செல்லும் குக் வித் கோமாளி பிரபலம்.. இணையத்தில் உலாவும் இந்த செய்தி உண்மையா?
ஜீ தமிழில் இந்த மாதம் முதல் தனது டெலிகாஸ்டை தொடங்கிய புத்தம் புதிய சீரியல் ’மாரி’ இந்த சீரியல் மூலம் திருமதி செல்வம் அர்ச்சனா மீண்டும் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இது போக இந்த சீரியலில் நடிகர் பாண்டிராஜ், நடிகை சோனா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த சீரியல் புரமோவில் தற்போது வனிதா விஜயகுமாரும் இடம் பெற்றுள்ளார்.
இந்த சீரியலில் வனிதா முழு நேரம் நடிக்கிறாரா அல்லது கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.ஆனால் இதிலும் வழக்கம் போல் வனிதாவுக்கு வில்லி ரோல் தான்.புரமோவிலே ஹீரோயின் கன்னத்தில் அறைகிறார். இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் வனிதாவின் என்ட்ரியை பார்த்து ஷாக் ஆகி சில நகைச்சுவையான கமெண்டுகளை பதிவு செய்துள்ளனர். இன்னும் சிலர் மல்டி டாஸ்க் செய்யும் வனிதாவை பயங்கரமாக புகழ்ந்து தள்ளி இருக்கின்றனர். மொத்தத்தில் வெள்ளித்திரை பிளஸ் சின்னத்திரை இரண்டிலும் வனிதா பிஸி நடிகையாக வலம் வருவது மீண்டும் மிண்டும் உறுதி ஆகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.