Home /News /entertainment /

சேனல் டிஆர்பிக்காக யோசித்த ஜீ தமிழ்.. முதலில் வந்த பெயர் வனிதா விஜயகுமார்!

சேனல் டிஆர்பிக்காக யோசித்த ஜீ தமிழ்.. முதலில் வந்த பெயர் வனிதா விஜயகுமார்!

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒரு சிறிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பரீட்சயமானவர் தான் நடிகை வனிதா. இவர் கலந்து கொண்ட சீசனில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன்3ல் போட்டியாளராக பங்கேற்றவர் தான் வனிதா. இந்த சீசன் தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது என்று சொல்லலாம். அதிலும், அந்த சீசன் டிஆர்பி-யில் முதலிடம் பிடித்ததற்கு ஒரு பங்கு காரணம் வனிதா என்று சொல்லும் அளவிற்கு நிகழ்ச்சியை மிக விறுவிறுப்பாகவும், சண்டைகளுடன் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு சென்றார்.

    அதன் பிறகு, விஜய் டிவி-யின் சூப்பர் ஹிட் ஷோவான குக்கு வித் கோமாளியில் பங்கேற்று பட்டத்தையும் வென்றார். அந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மேலும் வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து, கலக்க போவதுயாரு நிகழ்ச்சியில் ஜட்ஜ்-ஆக கலந்துகொண்டார். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் சிறிய வேடங்களில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார். இவர் ஏற்கனவே, சந்திரலேகா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    அதன் பிறகு அவர் விரும்பியவரை மனம் முடித்ததால், வாழ்விலும் பல சர்ச்சைகளுக்கு ஆளானார். பின்னர் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். அப்போது விஜய் டிவி-யில் பிக்பாஸ் நட்சத்திரங்களை வைத்து டான்ஸ் ஷோ நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட இவர் பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து தற்போது இவர் பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

    பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள  படத்திலும், பவர்ஸ்டாருக்கு ஜோடியாக ’பிக் அப் ட்ராப் ’படத்திலும் வனிதா நடித்து வருகிறார். இந்த நிலையில், வனிதா மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒரு சிறிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆம், ஜீ தமிழ் சேனலில் ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர்ஹிட் சீரியலான திருமதி ஹிட்லரில் தான், வனிதா கெஸ்ட் ரோலில் நடிக்க வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. வனிதா விஜயகுமார் தென்னிந்திய நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார்.

    1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். ஓரிரு படங்களில் நடித்த பின்னர் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகியிருந்தார். பின்னர் இவர் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ஒரு படம் நடித்து வெளியிட்டிருந்தார். ஆனால் படம் நினைத்த அளவிற்கு செல்லவில்லை. தற்போது, இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: TV Serial, Vanitha Vijayakumar, Zee Tamil Tv

    அடுத்த செய்தி