ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வேற மாதிரியான ட்விஸ்ட்.. ரசிகர்களிடம் சபாஷ் வாங்கும் வானத்தை போல சீரியல் இயக்குனர்!

வேற மாதிரியான ட்விஸ்ட்.. ரசிகர்களிடம் சபாஷ் வாங்கும் வானத்தை போல சீரியல் இயக்குனர்!

வானத்தை போல

வானத்தை போல

வானத்தை போல புரமோவை பார்த்த ரசிகர்கள் இயக்குனரை பாராட்டி தள்ளியுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வானத்தை போல சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்டை கொடுத்து எதிர்பார்ப்பை கூட்டியுள்ளார் இயக்குனர்.

  சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் வானத்தை போல சீரியல் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சீரியல் லிஸ்டில் உள்ளது. இந்த தொடரில் ஆரம்பத்தில் சின்ராசு, துளசி ரோலில் நடித்த தமன், ஸ்வேதா ஆகியோர் பாதியில் வெளியேற இப்போது இந்த ரோலில் சின்னத்திரை நடிகர் ஸ்ரீ மற்றும் மன்யா நடித்து வருகிறார்கள். சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடின் படி கோமதியின் மகள் வள்ளியை காணவில்லை. வீட்டில் இருக்கும் அனைவரும் எல்லா இடத்திலும் தேடி அலைகின்றனர்.

  இன்னும் 1 வாரத்தில் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  வள்ளி காணாமல் போக என்ன காரணம்?  என தெரியாமல் வீட்டில் இருக்கும் அனைவரும் குழம்புகின்றனர். அதுமட்டுமில்லை நேற்றைய எபிசோடில் துளசியின் முன்னாள் காதலன் வெற்றி வீட்டுக்கு வந்து எல்லோருக்கும் ஸ்வீட் தந்துவிட்டு செல்கிறான். இதனால் ராஜபாண்டிக்கு சந்தேகம் வருகிறது. பின்பு ராஜ பாண்டி, சின்ராசு இருவரும் வள்ளியை எல்லா இடத்திலும் தேடி பார்க்கின்றனர். கடைசியில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டாக வெற்றியும் வள்ளியும் கல்யாணம் செய்து கொள்கின்றனர்.

  இதுக் குறித்த புரமோ இப்போது வெளியாகியுள்ளது. துளசியை பழிவாங்க வெற்றி,  ராஜபாண்டியின் அத்தை மகள் வள்ளியை திருமணம் செய்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைகிறான். இந்த திட்டம் துளசிக்கு புரிகிறது. இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் இயக்குனரை பாராட்டி தள்ளியுள்ளனர். கெஸ் செய்ய முடியாத ட்விஸ்ட், சபாஷ் என ரசிகர்கள்  கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

  ' isDesktop="true" id="813686" youtubeid="quTi6laKG1g" category="television">

  சில மாதங்களுக்கு முன்பு சின்ராசு - சந்தியா திருமணத்தை நிறுத்தி, சின்ராசுவை பொன்னிக்கு கல்யாணம் செய்து வைப்பது போல் சீரியல் டெலிகாஸ்ட் ஆன நேரத்தில் மொத்த ரசிகர்களும் வானத்தை போல சீரியல் இயக்குனரை திட்டி தீர்த்து இருந்தனர். இப்போது அப்படியே திரைக்கதையை மாற்றி இயக்குனர்   ரசிகர்களிடம் சபாஷ்  வாங்கி இருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial